twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாயும் கொரோனாவால் நோயாய் குலைந்த சினிமா.. தீபாவளிக்குத் தள்ளிப் போகிறதா விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ்?

    By
    |

    சென்னை: விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் அல்லது தீபாவளிக்கு தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது.

    Recommended Video

    Reba monica opens up about Thalapathy Vijay | Lock Down Dairies

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

    மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    சன் டிவியில் அஜித்தின் வீரம்.. தாறுமாறாக டிரெண்டாக்கும் தல ரசிகர்கள்.. டிஆர்பியில் சாதனை படைக்குமா?சன் டிவியில் அஜித்தின் வீரம்.. தாறுமாறாக டிரெண்டாக்கும் தல ரசிகர்கள்.. டிஆர்பியில் சாதனை படைக்குமா?

    குட்டி ஸ்டோரி

    குட்டி ஸ்டோரி

    இந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல், காதலர் தினத்தன்று வெளியானது. பாடலை நடிகர் விஜய் பாடி இருக்கிறார். லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என்று தொடங்கும் அந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார். இந்த பாடல் வைரலானது. இதையடுத்து இந்த படத்தின், பாடல்கள் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டன.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    அப்போது விஜய் சேதுபதியும் விஜய்யும் பேசிய பேச்சுகள் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து படத்தை கடந்த 9 ஆம் தேதியன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கி இருந்தது. இந்நிலையில்தான் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.

    ஊரடங்கு

    ஊரடங்கு

    இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு இந்த மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்குப் பிறகு ஊரடங்கு நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சில மாதங்களாகும். அதனால் மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பார்களா என்பது சந்தேகமே என்று நினைக்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

    அட்வான்ஸ்

    அட்வான்ஸ்

    இதனால், மாஸ்டர் படத்துக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை, பல வினியோகஸ்தர்கள் திருப்பிக் கேட்டுள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே, வினியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவிகித டிடிஎஸ் வரியை நீக்க வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    தீபாவளி ரிலீஸ்

    தீபாவளி ரிலீஸ்

    அதை நீக்கினால்தான் படங்களை வெளியிடுவோம் என்று முடிவெடுத்துள்ளனர். இதனால் அவர்கள் படங்களை வினியோகிக்க மாட்டார்கள். இதுவும் ரிலீஸுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக, இன்டஸ்ட்ரியில் கூறுகின்றனர்.

    English summary
    The makers of Master had planned to release the film on April 9, however with the nationwide curfew imposed by Prime Minister Narendra Modi for the next 21 days, so they push the release to May or June.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X