உருட்டி மிரட்டும் கொரோனா... விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ்.... ஜூன் மாதத்துக்கு தள்ளிப் போகுதாமே?

By

சென்னை: விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் எப்போது ரிலீஸ் | Top 5 Beat

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

விஜய் செல்ஃபி

விஜய் செல்ஃபி

இந்தப் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்தபோது நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து விசாரணை நடத்தினர். நெய்வேலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்ற விஜய்யை பார்க்க, திருவிழா போல ரசிகர்கள் கூடினர். அப்போது நடிகர் விஜய், ரசிகர்களுடன் எடுத்த செல்பி வைரலானது.

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி

இந்தப் படத்தின் முதல் பாடலான குட்டி ஸ்டோரி காதலர் தினத்தன்று வெளியானது. அந்தப் பாடலை நடிகர் விஜய் பாடி இருக்கிறார். லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என்று தொடங்கும் அந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார். அனிருத் இசையில் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இது. ஏற்கனவே கத்தி படத்துக்காக அனிருத் இசையில் செல்பி புள்ள பாடலை விஜய் பாடியிருந்தார். இது வைரலானது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இந்தப் படத்தின் பாடல்கள் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டன. அப்போது விஜய் சேதுபதியும் விஜய்யும் பேசிய பேச்சுகள் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து படத்தை ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் செய்யும் வேலைகளில் படக்குழு இறங்கி இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்கள் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.

மே அல்லது ஜூன்

மே அல்லது ஜூன்

இந்நிலையில், இப்போது ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி இதற்கான அறிவிப்பை வெளி யிட்டுள்ளார். இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் மாஸ்டர் பட ரிலீஸ், மே அல்லது ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

நடிகர் விஜய் படங்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு உண்டு. அவரது முந்தைய படங்கள் அங்கு நல்ல வசூலைப் பெற்றுள்ளன. அமெரிக்க அரசும் அங்குள்ள தியேட்டர்களை 6 முதல் 12 வாரங்கள் வரை மூட முடிவு செய்துள்ளது. அதனால் அங்குள்ள சூழலையும் கருத்தில் கொண்டு, மாஸ்டர் பட ரிலீஸ் தேதியை, தயாரிப்பாளர் ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X