மாஸ்டர் ரிலீஸை எதிர்பார்க்கும் திரையுலகம்.. திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்படுமா?

சென்னை: மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகள், மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் வெளியான தாராள பிரபு, வால்டர், அசுரகுரு உள்ளிட்ட படங்கள் பயங்கர நஷ்டத்தை சந்தித்துள்ளன.

இந்நிலையில், ஏப்ரல் 9ம் தேதி திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படம் வருமா? வராதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

வசூல் மன்னன்

வசூல் மன்னன்

விஜய், அஜித், ரஜினி படங்கள் வெளியாகும் போது தான் தியேட்டர் உரிமையாளர்கள் பலருக்கும் நல்ல வசூல் கிடைக்கும். சினிமா பிசினஸ் சூடு பிடிக்கும். மாஸ்டர் இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடந்து முடிந்த நிலையில், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியை திரையுலகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது.

ஆப்பு வைத்த வைரஸ்

ஆப்பு வைத்த வைரஸ்

ஜேம்ஸ் பாண்ட் படம், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் என பெரிய ஹாலிவுட் படங்களின் ரிலீசுக்கே கொரோனா வைரஸ் ஆப்பு வைத்துள்ளது. அனைத்து பெரிய படங்களின் ரிலீஸ் தேதியும் பல மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோலிவுட்டில் ஏப்ரலில் ஆவது படங்கள் ரிலீசாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே தேதியில்

அதே தேதியில்

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, திட்டமிட்டபடி ஏப்ரல் 9ம் தேதியே மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏப்ரல் 1ம் தேதிக்குள் வைரஸ் தாக்கம் குறையும் பட்சத்தில், தியேட்டர்கள் திறக்கப்பட்டால், ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் ரிலீசாவது கன்ஃபார்ம்.

ரீ-ரிலீஸ்

ரீ-ரிலீஸ்

தாராள பிரபு உள்ளிட்ட கடந்த வாரம் வெளியான படங்கள் ரீ-ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் கொரோனா பாதிப்பு குறைந்தால் மட்டுமே, இதுபோன்ற ரீ-ரிலீஸ் மற்றும் ஏப்ரல் ரிலீஸ் திரைப்படங்களுக்கு சாதகமாக அமையும். இல்லையென்றால், மே மாதத்தில் தான் படங்கள் வெளியாகும் என தெரிகிறது.

வசூல் பாதிப்பு

வசூல் பாதிப்பு

பல கோடிகளை கொட்டி படம் எடுத்த பல தயாரிப்பாளர்கள், தற்போது, என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். உரிய நேரத்தில் படங்கள் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனால், வாங்கிய வட்டி எல்லாம் குட்டிப் போட்டு, பல தயாரிப்பாளர்களின் கழுத்தை நெறிக்கும் நிலையும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதற்கெல்லாம் எப்போது விமோசனம் வரும் என்று தான் பலரும் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X