»   »  சமூக வலைத் தளங்களைக் கலக்கும் மெர்சல் படத்தின் தெலுங்கு தலைப்பு! #Adirindhi

சமூக வலைத் தளங்களைக் கலக்கும் மெர்சல் படத்தின் தெலுங்கு தலைப்பு! #Adirindhi

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் மெர்சல் படத்தின் தெலுங்கு ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு அதிரிந்தி என்று தலைப்பிட்டுள்ளனர்.

அட்லி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். வரும் அக்டோபரில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் விஜய் பிறந்த நாளையொட்டி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

தெலுங்கில்

தெலுங்கில்

இந்த நிலையில் படத்தின் தெலுங்குப் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன. தெலுங்கில் இந்தப் படத்துக்கு அதிரிந்தி என்று தலைப்பிட்டுள்ளனர்.

ட்ரெண்டிங்

சமூக வலைத் தளங்களில் இந்த தெலுங்குப் போஸ்டர்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ட்விட்டரில் தொடர்ந்து #Adirindhi முதலிடத்தில் உள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

விஜய் வேறு மொழிகளில் நடிப்பதில்லை. வந்த வாய்ப்புகளையும் அவர் தொடர்ந்து மறுத்துவிட்டார். ஆனாலும் மலையாளம், தெலுங்கு மக்களிடம் விஜய் படங்களுக்கு வரவேற்பு உள்ளது.

நேரடியாக

நேரடியாக

இந்த மெர்சல் படத்தை தமிழில் வெளியிடுவதைப் போலவே நேரடிப் படமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தெலுங்குக்கென்று தனி சென்சார் வாங்கப் போகிறார்கள்.

English summary
The Telugu version of Vijay's Mersal has been titled as Adirindhi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil