விஜய்யின் 'மெர்சல்' படத்துக்கு மேலும் ஒரு கௌரவம்.. ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெருமிதம்!
Recommended Video

சென்னை : விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. படத்தில் இடம்பெற்ற வசனங்களால் ஏற்பட்ட சர்ச்சைகளால் இந்தியா முழுவதும் கவனம் பெற்றது 'மெர்சல்'.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்திருந்தது.

கடந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில் அதிக சர்ச்சைகளைச் சந்தித்த இந்தப் படமே அதிக வசூலையும் அள்ளியது. இதனால், விஜய் ரசிகர்கள் 'மெர்சல்' திரைப்படத்தை செமயாக கொண்டாடினர்.
இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க 'மெர்சல்' திரைப்படத்துக்கு அழைப்பு வந்துள்ளதாக ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், 'மெர்சல்' படத்திற்கு பிரிட்டன் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் மெர்சல் படமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











