கபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா?
Recommended Video

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் ஒரு விஷயத்தில் ரஜினியின் கபாலி படத்தின் சாதனையத் தாண்டியுள்ளது.
வசூலில் அல்ல.. அதிக டீசர் பார்வைகளைப் பெற்றதில்.

பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்த இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், டீமானிடைசேஷன், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக பாஜகவினர் படத்துக்கு இலவச விளம்பரம் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் படத்தின் வசூல் 200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் 'அதிரிந்தி' என்ற பெயரில் 'மெர்சல்' படம் வெளியானது. அங்கும் பாஸிடிவ் ரிப்போர்ட்தான்.
விஜய் படங்களில் 'மெர்சல்' பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மெர்சல் படத்தின் டீசர் புதிய சாதனைப் படைத்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் டீசர் சாதனையையும் மெர்சல் முறியடித்துள்ளது. கபாலி டீசர் இதுவரை 34,582,207 பார்வைகளைப் பெற்றிருந்தது. மெர்சல் டீசர் 34,605,562 பார்வையாளர்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











