ஆடை இயக்குநருக்கு இப்படியொரு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்.. என்ன பண்ணாரு தெரியுமா?
சென்னை: மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ரத்னகுமார், அமலா பால் நடிப்பில் ஆடை என்ற தனது அடுத்த படத்தை கொடுத்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இந்திய சினிமாவையே ஆச்சர்யப்படுத்திய நம்ம ஆடை இயக்குநர் ரத்னகுமாருக்கு, மிகப்பெரிய ஆச்சர்யத்தை நடிகர் விஜய் நேற்று கொடுத்துள்ளார்.
ரத்னகுமாரின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அவருக்கு சர்ப்ரைஸ் பிறந்த நாள் வாழ்த்தினை நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

ரைட்டர்
லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரான ரத்னகுமார், தளபதி 64 படத்திற்கு கூடுதல் ஸ்க்ரிப்ட் ரைட்டர் பணியை செய்து வருகிறார். வித்தியாசமான கதைக் களத்துடன் வெளியான அவரது ஆடை படம் இந்தியளவில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கிய நிலையில், லோகேஷ் கனகராஜும், ரத்னகுமாரும் இணைந்து தளபதி 64 படத்திற்கான திரைக்கதையை உருவாக்கி வருகின்றனர்.

பிறந்தநாள்
தளபதி 64 படத்திற்காக திரைக்கதை எழுதும் பணியில் இருக்கும் ரத்னகுமார், நேற்று தனது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடவில்லை. வேலை தான் முக்கியம் என ஓடும் இயக்குநர்கள் பெரும்பாலும், தங்களின் பிறந்த நாளை கண்டு கொள்வதில்லை. பிகில் படத்தின் ஷூட்டிங்கின் போது, இந்துஜா மற்றும் அம்ரித அய்யரின் பிறந்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று அதுபோன்ற கொண்டாட்டம் நடைபெறவில்லை.
மிமிக்ரி
குறும்புத்தனத்திற்கு பெயர் போனவர் நடிகர் விஜய் என்பது அவருடன் நெருங்கி பழகும் பலருக்கு தெரிந்த விஷயம் தான். ரத்னகுமாரின் பிறந்த நாள் நேற்று தளபதி 64 செட்டில் கொண்டாடப்படவில்லை என்றாலும், படத்திற்காக டிராவல் செய்து கொண்டிருந்த ரத்னகுமாருக்கு, போன் செய்து, லோகேஷ் கனகராஜ் போல மிமிக்ரி செய்து, ஹேப்பி பர்த்டே மச்சி எனக் கூறியுள்ளார். பின்புதான் அது விஜய் என தெரிந்து கொண்ட ரத்னகுமார், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நியூ இயர்
தளபதி 64 படத்தின் தலைப்பு ‘டாக்டர்' என இணைய தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ தகவல் வரும் நியூ இயர் தினத்தன்று ஃபர்ஸ் லுக்குடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











