சங்கீதாவிடம் நேரடியாகவே கேட்டுவிட்டோம்.. அவங்களுக்கு என்ன சொல்றதுனு தெரியல.. விஜய் அம்மா ஓபன்

சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சில மாதங்களுக்கு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதோடு மட்டுமின்றி நடிகை ஒருவருடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாகவும் சொல்லி பரபரப்பை கிளப்பினார். அடுத்த மாதம் இந்த மனுவானது விசாரணைக்கு வரவிருக்கிறது. முதலமைச்சராக விஜய் அந்த விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார். இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய்யும், சங்கீதாவும் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர். பல வருடங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்த அவர்களுக்குள்; கடந்த சில வருடங்களாகவே மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் ஏற்பட்டன. சாதாரண சண்டைதான் போகப்போக சரியாகிவிடும் என குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் நினைக்க; இரண்டு பேருக்குள்ளும் எதுவும் தீர்ந்தபாடில்லை. இதன் காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுவும் தாக்கல் செய்திருந்தார் சங்கீதா.

Vijay s Mother Shoba Opens Up About How Sangeetha Became Their Family s Choice for Marriage
Photo Credit:

சங்கீதா போட்ட குண்டு: விவாகரத்து மனு தாக்கல் செய்ததோடு மட்டுமின்றி, தனது கணவர் விஜய்க்கும், இன்னொரு நடிகைக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாகவும்; இரண்டு பேரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாகவும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் சொன்ன நடிகை திரிஷாவாக இருக்குமோ என்று பலரும் சந்தேகப்பட்ட நிலைமையில்; விஜய்யும், திரிஷாவும் மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு வந்திருந்தார்கள்.

Also Read
முதலமைச்சரானதும் முதல்முறை.. கோட் சூட்டிலிருந்து வேட்டி சட்டைக்கு மாறிய விஜய்.. என்ன காரணம்?
முதலமைச்சரானதும் முதல்முறை.. கோட் சூட்டிலிருந்து வேட்டி சட்டைக்கு மாறிய விஜய்.. என்ன காரணம்?

முன் வரிசையில் திரிஷா: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார் விஜய். பதவியேற்பு விழாவுக்கு திரிஷாவும் அவரது தாய் உமா கிருஷ்ணனும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் பேசிய உரையை; திரிஷா கண்கள் கலங்கி எமோஷனலாக பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே அவர்களை இணைத்து வைத்து வரும் கிசுகிசுக்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

அடுத்த மாதம் விசாரணை: சூழல் இப்படி இருக்க விஜய் - சங்கீதா விவாகரத்து மனு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவிருக்கிறது. முதலமைச்சராக இந்த விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார் ஜோசாப் விஜய். அநேகமாக அன்றைய தினம் இரண்டு பேருக்கும் சட்டப்பூர்வமான விவாகரத்து கிடைத்துவிடும் என்றுதான் எல்லோரும் கணித்திருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா தன் முன்னாள் மருமகள் சங்கீதா குறித்து பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் மீண்டும் ட்ரெண்டாகியிருக்கிறது.

ஷோபா பேச்சு: அவர் அந்த வீடியோவில், "சங்கீதா லண்டனிலிருந்து விஜய்யை பார்ப்பதற்காக சென்னை வருவார். முதல்முறை அவர் வந்து சென்றபோது அவரை விஜய்க்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற எந்த ஐடியாவும் எங்களுக்கு இல்லை. இரண்டாவது முறை வந்தார். அப்போது அவரிடமே எனது கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர், எங்கள் மகன் விஜய்யை திருமணம் செய்துகொள்ள விருப்பமா? என்று கேட்டார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் சங்கீதாதான் எங்கள் வீட்டு மருமகளாக வர வேண்டும் என நாங்கள் ரொம்பவே விரும்பினோம். விஜய்யிடமும் இதுகுறித்து கேட்டோம். அவரும் உங்கள் இஷ்டம் என சொல்லிவிட்டார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X