Vijay :அன்னையர் தின ஸ்பெஷல்.. விஜய்க்கு பிடித்த உணவு குறித்து பகிர்ந்த ஷோபா சந்திரசேகர்!
சென்னை : நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் தயாரிப்பாளர்களை ஏமாற்றுவதில்லை.
இந்நிலையில் தன்னுடைய தந்தையிடம் சில வருத்தங்களை கொண்டுள்ள அவர், அவரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார். ஆனால் தன்னுடைய அம்மாவிடம் மட்டும் எப்போதும் அவர் சுமூகமான உறவை மெயின்டெயின் செய்து வருகிறார்.
அவரை அவ்வப்போது சந்தித்து அவருக்கு தொடர்ந்து மகிழ்ச்சியை அளித்து வருகிறார். அவர் தொடர்ந்து தன்னுடைய மகன்மீது அன்பு பாராட்டி வருகிறார்.

விஜய்க்கு பிடித்த உணவு குறித்து பகிர்ந்த ஷோபா : நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கிய விஜய்யின் பயணம் தற்போது லியோ படம் வரை தொடர்ந்து வருகிறது. இந்தப் பயணத்தில் அவர் சந்தித்த அவமானங்கள், துயரங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதற்கெல்லாம் சேர்த்துவைத்து தற்போது ஏராளமான ரசிகர்களை பரிசாக பெற்றுள்ளார். அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அந்தப் படங்கள் தொடர்ந்து வசூல்மழையை பொழிந்துவருவதற்கு காரணம் அவரது ரசிகர்கள்தான்.
விஜய்யின் கேரியரை சிறப்பாக வடிவமைத்தவர் அவரது தந்தை எஸ்ஏசிதான். அவரது ஆரம்பகால படங்களை இயக்கி விஜய்க்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தவர் அவர். ஆனாலும் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் சில வருடங்களாகவே சரியான உறவு இல்லை. இருவரும் பேசிக் கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வைத்தாலும் இந்த விஷயத்தில் மிகவும் கடுமையாகவே நடந்துக் கொள்கிறார் விஜய்.
ஆனாலும் தன்னுடைய அம்மா ஷோபா சந்திரசேகர் விஷயத்தில் மட்டும் அவர் எப்போதும் சுமூகமாகவே நடந்துக் கொள்கிறார். அவரை அவ்வப்போது சந்தித்து தன்னுடைய உறவை மெயின்டெயின் செய்து வருகிறார். சமீபத்தில் ட்விட்டரில் அக்கவுண்ட் துவங்கிய ஷோபா சந்திரசேகர், சோபாவில் அமர்ந்திருக்க அவரது காலடியில் விஜய் அமர்ந்திருக்கும் படியான புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் புகைப்படம் அதிகமான லைக்ஸ்களை பெற்றுத்தந்தது.

தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே அதிகமான ஃபாலோயர்களையும் பெற்றுத் தந்துள்ளது. நடிகை ராதிகாவும் இந்த ட்வீட்டிற்கு கமெண்ட் செய்து பாராட்டியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி விஜய் குறித்த சில விஷயங்களை ஷோபா சந்திரசேகர் பிரபல மீடியாவில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். விஜய்யின் பிட்னஸ் ரகசியம் குறித்து அவர் பேசியுள்ளார். அவர் சிறப்பான பிட்னசை மெயின்டெயின் செய்து வரும் நிலையில் அதுகுறித்தும் உண்மையை ஷோபா வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய்க்கு பிடித்த உணவு தோசைதான் என்றும் காலையில் இரண்டு தோசை, இரவில் இரண்டு தோசை மட்டுமே சாப்பிடுவார் என்றும் ஷோபா தெரிவித்துள்ளார். ஆனால் வொர்க்அவுட் உள்ளிட்டவற்றை சிறப்பாக செய்வார் என்றும் ஷோபா தெரிவித்துள்ளார். இதுதான் விஜய்யின் பிட்னஸ் ரகசியம் என்றும் கூறியுள்ளார். தற்போது லியோ படத்தில் கேங்ஸ்டராக நடித்துவரும் விஜய்யின் பிட்னஸ் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











