Thalapathy 63: 'தளபதி 63' ஆரம்பமே இப்படியா?: சூதானமா இருங்க அட்லி
சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் கசிந்துள்ளது.
தெறி, மெர்சல் படங்களை அடுத்து இயக்குனர் அட்லியும், விஜய்யும் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். தற்போதைக்கு தளபதி 63 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

கதை
தளபதி 63 பற்றிய விபரங்கள் கசியத் துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபனிங் காட்சி மற்றும் யோகி பாபுவின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்து சமூக வலைதளங்களில் ஒரு ரவுண்டு வந்தது.

மைக்கேல்
யோகி பாபுவை அடுத்து விஜய் கதாபாத்திரத்தின் பெயர் கசிந்துள்ளது. அவரின் பெயர் மைக்கேல் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் தான் உறுதி செய்ய வேண்டும்.

அட்லி
விஜய் படம் குறித்த தகவல்கள், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோக்கள், புகைப்படங்கள் கசிவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அட்லி ஜாக்கிரதையாக இல்லை என்றால் மேலும் பல தகவல்கள் கசியக்கூடும்.

கால்பந்து
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தளபதி 63. பெண்களுக்கு பயிற்சி அளிப்பவராக நடிக்கிறார் விஜய். இதற்காக அவர் தனியாக பயிற்சி எல்லாம் எடுத்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











