டாம் க்ரூஸ் பீச் ஹவுஸ் போல.. நீலாங்கரையில் பிரம்மாண்ட வீடு கட்டுகிறாரா விஜய்? பரபரக்கும் கோலிவுட்!

சென்னை: ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் பீச் ஹவுஸ் போல, நீலாங்கரையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை நடிகர் விஜய் கட்டி வருவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Recommended Video

Thalapathy Vijay க்கு 20 வயசுல அவ்வளவு Maturity • Vanitha Vijaykumar Exclusive

கடந்த ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் வீட்டில் ரெய்டு

விஜய் வீட்டில் ரெய்டு

மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்து கொண்டிருந்தபோது, வருமான வரித்துறை அதிகாரிகள், ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைந்து நடிகர் விஜய்யை தங்கள் காரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றது பெரும் பரபரப்பை கிளப்பியது. தொடர்ந்து விஜய்யின் வீடுகளில் ரெய்டும் நடத்தினர்.

ஒண்ணும் கிடைக்கல

ஒண்ணும் கிடைக்கல

பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் கிட்டத்தட்ட 23 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பின், விஜய் வீட்டில் இருந்து எந்தவொரு முறைகேடான ஆவணங்களும், ரொக்கமும் கைப்பற்றப்படவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். இது பழிவாங்கும் நடவடிக்கை என்று ரசிகர்கள் கொந்தளித்தனர்.

டாம் க்ரூஸ் பீச் ஹவுஸ்

டாம் க்ரூஸ் பீச் ஹவுஸ்

இந்நிலையில், நடிகர் விஜய் நீலாங்கரையில் பிரம்மாண்டமாக இன்னொரு புது வீட்டை கட்டி வரும் தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் பிரம்மாண்டமான பீச் ஹவுஸ் போல அந்த வீடு கட்டப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

நேரில் பார்த்துள்ளார்

நேரில் பார்த்துள்ளார்

அடிக்கடி அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரும் தளபதி விஜய், ஒரு முறை பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் பிரம்மாண்ட பீச் ஹவுஸை காணும் வாய்ப்பு கிடைத்ததாகவும், நேரில் பார்த்த அவர், அதன் உள்கட்டமைப்புகளை பார்த்து வியந்து போனதாகவும், தற்போது அதே போல ஒரு வீட்டை கட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஸ்கூல் கட்டுறாரு

ஸ்கூல் கட்டுறாரு

ஆனால், தளபதி விஜய் ரசிகர்கள், நீலாங்கரையில் நடிகர் விஜய் கட்டி வருவது பிரம்மாண்ட பீச் ஹவுஸ் இல்லை என்றும், மாணவர்களுக்கான புது விதமான பள்ளி என்றும் கூறி வருகின்றனர். ஆனால், இது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் நடிகர் விஜய் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது ஸ்கூலா அல்லது வீடா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X