ரசிகருக்காக ட்விட்டரில் DP-ஐ மாற்றிய விஜய்... அஜித்தின் துணிவு அப்டேட்டுக்கு இப்படியும் பதிலடியா?

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது.

அதேபோல், அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், விஜய் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

பரபரக்கும் பொங்கல் ரேஸ்

பரபரக்கும் பொங்கல் ரேஸ்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - அஜித்தின் திரைப்படங்கள் நேரடியாக பொங்கல் ரேஸில் களமிறங்குவது இருதரப்பு ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் - அஜித் நடுவில் வந்த உதயநிதி

விஜய் - அஜித் நடுவில் வந்த உதயநிதி

வாரிசு, துணிவு இரண்டு படங்களின் இறுதிக்கட்ட பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிக்காத நிலையில், துணிவு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது. விஜய் - அஜித் படங்களுக்கு இடையே பலமான போட்டி இருக்கும் என தெரிந்தும், உதயநிதி அஜித்துக்கு ஃபேவராக களமிறங்கியுள்ளது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் வாரிசு படத்தை தமிழகத்தில் வெளியிடப்போவது யார் என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

விஜய் கொடுத்த பதிலடி

விஜய் கொடுத்த பதிலடி

அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் வாங்கியதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், விரைவில் ரிலீஸ் தேதியையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துணிவு அப்டேட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜய்யும் தரமான செய்கை செய்துள்ளார். அதன்படி, தனது டிவிட்டர் டிபியில் ஸ்டைலிஷான போட்டோ பெயிண்டிங்கை மாற்றியுள்ளார். ஸ்மார்ட்டான ஹேர் ஸ்டைலில் விஜய் சிரித்தபடி இருக்கும் இந்த டிபி, அவரது ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது.

ரசிகரின் அன்பளிப்பு

ரசிகரின் அன்பளிப்பு

விஜய் தனது டிவிட்டரில் வைத்துள்ள டிபி, அவரது தீவிர ரசிகர் கஜேந்திரா என்பவர் செய்து கொடுத்த பெயிண்டிங் என கூறப்படுகிறது. இந்த போட்டோவில் விஜய்யை தத்ரூபமாக பெயிண்டிங்கில் கொண்டுவந்துள்ளார் அவரது ரசிகர். துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடும் நிலையில், அஜித்துக்காக உதயநிதி இருப்பதைப் போல, தனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக விஜய் கூறுகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அஜித்தின் துணிவு அப்டேட் வெளியான நிலையில், விஜய் டிவிட்டர் டிபியை மாற்றியுள்ளது இன்னும் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X