இவ்ளோ கோடியா? தெலுங்கு பிசினஸில் பிகில் படத்தை முந்திடுச்சாமே, தளபதி 64
சென்னை: விஜய்யின் தளபதி 64 படத்தின் தெலுங்கு பிசினஸ், பிகில் படத்தின் பிசினஸை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் ஹிட்டானது. இந்த படங்கள் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டாகின.
இதையடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கல்வித்துறை
தளபதி 64 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பேராசியராக விஜய் நடிக்கிறார் என்றும் கல்வித்துறையில் நடக்கும் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவராக வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

வில்லன் விஜய் சேதுபதி
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். திமிர்பிடித்த கொடூரமான அரசியல்வாதியாக அவர் நடிக்கிறார் என்றும் இதற்காக அவருக்கு ஸ்பெஷல் மேக்கப் போடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கு பிசினஸ்
இதற்கிடையே இந்த படத்தின் தெலுங்கு பிசினஸ், பிகில் படத்தின் பிசினசை முந்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் நடித்த பிகில் படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

மகேஷ் கொனேரு
இதை ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் மகேஷ் கொனேரு என்பவர் ரூ.7.5 கோடிக்கு வாங்கி வெளியிட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இவரே, தளபதி 64 படத்தை ரூ.8.5 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











