Vijay's Next Movie Heroine-யார் படம் எடுத்தாலும் ஹீரோயின் இவங்கதான்..நல்லெண்ணத்தில் விஜய் எடுத்த அதிரடிமுடிவு?

சென்னை: Vijay's Next Movie Heroine (விஜய்யின் அடுத்த பட ஹீரோயின்) விஜய் தனது 68ஆவது படத்துக்கு கதாநாயகியை முடிவு செய்துவிட்டதாக கோலிவுட்டில் தகவல்கள் பரவியுள்ளன.

வாரிசு படத்துக்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். மாஸ்டர் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்துவருகிறார்.

லியோ ப்ரோமோ

லியோ ப்ரோமோ

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யும், லோகேஷும் இணைந்திருக்கும் படத்துக்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் டைட்டில் ப்ரோமோ சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் எல்சியூவில் கனெக்ட் செய்வார் என்றும் கருதப்படுகிறது.

நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கிய லோகேஷ்

நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கிய லோகேஷ்

வாரிசு படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார் விஜய். ஆனால் அந்தப் படம் கலவையான விமர்சனங்களையெ பெற்றது. பீஸ்ட் படமும் தோல்வி, வாரிசுக்கும் சுமாரான வரவேற்பு என்பதால் லியோ படம் அவருக்கு ஹிட் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே படத்தை பான் இந்தியா படமாக உருவாக்க திட்டமிட்ட லோகேஷ் கனகராஜ், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் என நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கியிருக்கிறார்.

காஷ்மீரில் முடிந்த ஷூட்டிங்

காஷ்மீரில் முடிந்த ஷூட்டிங்

படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கி நடந்துவந்தது. ஒட்டுமொத்த படக்குழுவும் 2 மாதங்கள்வரை அங்கு முகாமிட்டிருந்தது. விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் கடந்த மாத இறுதியில் முடிவடைந்தது. கடுமையான குளிரில் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும் கஷ்டப்பட்டு ஷூட்டிங்கை முடித்திருக்கின்றனர். இதுதொடர்பான மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. தற்போது படக்குழு குட்டி ரெஸ்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் முழு ஷூட்டிங்

சென்னையில் முழு ஷூட்டிங்

காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னையில் இரண்டு வாரங்களும், ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கையும் நடத்த லோகேஷ் திட்டமிட்டிருந்ததாகவும், காஷ்மீரில் படக்குழு பட்ட கஷ்டத்தை பார்த்த விஜய் இனி அவுட்டோர் ஷூட்டிங்குக்காக சென்னையை விட்டு எங்கும் நகர வேண்டாம் என முடிவு செய்து சென்னையிலேயே முழு ஷூட்டிங்கையும் முடிக்க கண்டிஷன் போட்டுவிட்டாராம். எனவே லியோவின் முழு ஷூட்டிங்கும் இனி சென்னையில்தான் நடைபெறும் என கூறப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய்

அட்லீ இயக்கத்தில் விஜய்

லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அட்லீ தற்போது ஜவான் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். எனவே அதனை முடித்துவிட்டு விஜய் படத்துக்கான பணிகளில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹெச்.வினோத்தும் விஜய்யிடம் கதை கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை எனவும் அட்லீதான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் எனவும் அடித்து கூறப்படுகிறது.

ஹீரோயின் விவகாரத்தில் விஜய்யின் முடிவு

ஹீரோயின் விவகாரத்தில் விஜய்யின் முடிவு

இந்நிலையில் தனது அடுத்த படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயினை விஜய் முடிவு செய்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தன் அடுத்த படத்தில் சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என விஜய் முடிவு செய்திருக்கிறாராம். ஏற்கனவே தெறி, கத்தி, மெர்சல் என விஜய்யுடன் சமந்தா இணைந்த மூன்று படங்களும் மெகா ஹிட்டாகியுள்ளன. ஆனால் காரணம் அதுமட்டும் இல்லையாம்; சமந்தா நோயிலிருந்து மீண்டு படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இருந்தாலும் அவரது இரண்டாவது இன்னிங்ஸில் மிகப்பெரிய திருப்புமுனை எதுவும் அமையவில்லை. எனவே தன்னுடன் நடித்தால் அவரது இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் பிஸியாகிவிடுவார் என்ற நல்லெண்ணத்தில்தான் விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X