விஜய்யின் மதுரை நிகழ்ச்சி ரத்து.. வேறொரு நாளில் நடத்த முடிவு!

By Shankar

சென்னை: தமிழக அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தால் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தர மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர்.

வேறொரு நாளில் நடத்திக் கொள்ளலாம் என பத்திரிகை நிர்வாகமும் விஜய் தரப்பும் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள வார பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று நடத்திய சர்ச்சைக்குரிய கருத்துக் கணிப்பில் விஜய் வெற்றி பெற்றார். இதையடுத்து விஜய் அந்த பத்திரிக்கைக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் விஜய்தான் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் இது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சூப்பர் ஸ்டார் என 35 ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் ரஜினி இன்னும் உச்சத்தில் இருக்கும்போது இந்த கருத்துக் கணிப்பு தவறானது. அடுத்தவருக்கு தந்த பட்டத்தை பிடுங்கித் தருவது தவறு என்று திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை

மதுரை

இந்த நிலையில் மதுரையில் ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கும் பிரமாண்ட விழாவில் விஜய்க்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய பிரபலங்கள்

இந்திய பிரபலங்கள்

இந்த பிரமாண்ட விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கூறப்பட்டது.

விஜய் அழைப்பு

விஜய் அழைப்பு

தனக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டும் விழாவுக்கு வருமாறு விஜய்யும் பல பிரபலங்களை செல்போன் மூலம் அழைத்தார். ஆனால் தமிழ் திரையுலகிலிருந்து இந்த விழாவில் யாரும் பங்கேற்க மறுத்துவிட்டனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசு அனுமதி இல்லை

அரசு அனுமதி இல்லை

ஆனால் இந்த விழாவுக்கு தமிழக அரசு ஆரம்பத்திலேயே அனுமதி மறுத்துவிட்டது. காரணம், இந்த விழா நடக்கும் ஆகஸ்ட் 15 தியாகிகளைக் கொண்டாட வேண்டிய சுதந்திர தினம். எனவே அன்று பாதுகாப்பு மற்றும் நாட்டின் பெருமையைப் போற்ற வேண்டும் என்று அரசுத் தரப்பில் பதில் வந்தது.

காத்திருப்பு

காத்திருப்பு

இருந்தாலும், கடைசி நேரத்தில் அனுமதி கிடைக்கும் என காத்திருந்தனர். ஆனால் அரசு தன் முடிவில் உறுதியாக இருந்ததால், நிகழ்ச்சி ஏற்பாடுகளை சில தினங்களுக்கு முன்பே கைவிட்டனர், விழா நடத்தவிருந்த பத்திரிகை நிர்வாகத்தினர்.

இன்னொரு நாள்

இன்னொரு நாள்

இதுகுறித்து விஜய்யின் மேலாளரும், படத் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமாரிடம் ஒன்இந்தியா சார்பில் தொடர்பு கொண்டு கேட்டோம். அவர், 'ஆகஸ்ட் 15 அன்று விழா நடத்த வேண்டாம் என முன்பே முடிவு செய்துவிட்டோம். இன்னொரு நாள், இந்த விழாவை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு வெளியாகும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X