விஜய் மட்டும் அப்படியொரு ட்வீட் போட்டுட்டா அவ்வளவுதான்.. மாஸ்டர் 4வது லுக்கா இதுதான் வருமோ?
Recommended Video
சென்னை: நெய்வேலியில் நடைபெற்று வரும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் 4வது லுக்காக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புள்ளிங்கோ இருக்காங்க வேற என்ன வோணும் என கேப்ஷன் போட்டு நடிகர் விஜய் ட்வீட் போட்டால், அவ்வளவு தான் தளபதி ரசிகர்களின் வெறித்தனம் அதிகமாகி விடும் என ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டை பார்த்த பாடலாசிரியர் விவேக், அதற்கு வாவ் என போட்டு வைரலாக்கி உள்ளார்.

மாஸ்டர் டிரெண்டிங்
மாஸ்டர் படம் இன்னும் இரண்டு மாதத்தில் திரைக்கு வரவுள்ளதை முன்னிட்டு, #MASTERManiaIn2Months என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் தளபதி ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டது. நெய்வேலி, என்எல்சி பகுதியில் விஜயை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூடிய நிலையில், அவர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை அந்த ஹாஷ்டேக்கில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
இப்படியொரு ட்வீட் போட்டால்
பிகில் படத்தை புரொமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய் கடந்த ஆண்டு 4 ட்வீட்களை போட்டு, ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார். தற்போது, மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் மூன்றாவது லுக் போஸ்டர் வரை ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில், தனது மொபைலில் விஜய் எடுத்த புகைப்படத்தை போட்டு, புள்ளிங்கோ இருக்காங்க வேறு என்ன வோணும் என ட்வீட் போட்டால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள் என இந்த ரசிகர் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
பாடலாசிரியர் விவேக்
ஆளப்போறான் தமிழன், ஒரு விரல் புரட்சி, சிம்டாங்காரன், வெறித்தனம், சிங்கப்பெண்ணே என தொடர்ந்து நடிகர் விஜய்க்கு மாஸ் பாடல்களை எழுதி வரும் பாடலாசிரியர் விவேக், இந்த ரசிகரின் ட்வீட்டை பார்த்து, வாயை பிளந்து வாவ் என்ற எமோஜிக்களை பதிவுட்டு தனது ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கேரள ரசிகர்
தளபதி விஜய்க்கு தமிழ்நாட்டை போல கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தெறி, மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து பல படங்கள் கேரளாவிலும் மிகப்பெரிய வசூலை குவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த ட்வீட்டை பார்த்த கேரள ரசிகர் ஒருவர் மேன் ஆஃப் மில்லியன்ஸ் என்ற செம்ம கமெண்ட்டை கொடுத்துள்ளார்.
அவர் உங்கள் ரசிகர்
நீங்கள் நடிகர் விஜயையின் ரசிகர்கள், ஆனால், அவர் உங்கள் ரசிகர் என மாஸ்டராக இருந்து மேஜராக மாறியுள்ள நடிகர் மகேந்திரன் ட்வீட் போட்டுள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழே, அவர் ரசிகர் அல்ல, எங்கள் உயிர் தளபதி என்றும், நன்றி நண்பா என்றும் விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











