தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?

By

சென்னை: நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார், நடிகை பூஜா ஹெக்டே.

தமிழில், ஜீவாவின் 'முகமூடி' மூலம் அறிமுகமானவர் இவர். பிறகு தமிழில் அதிக வாய்ப்பு இல்லை.

புட்ட பொம்மா

புட்ட பொம்மா

பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்து அசத்திய பூஜா ஹெக்டே, தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் யூடியூப்பில் சாதனைப் படைத்தது.

அந்த ரொமான்ஸ்

அந்த ரொமான்ஸ்

இப்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. பிரபாஸ் பிறந்த நாளன்று மோஷன் வீடியோ வெளியிடப்பட்டது. பிரபாஸும் பூஜாவும் ஸ்டைலாக ரயிலில் செல்லும் அந்த ரொமான்ஸ் வீடியோவும் வைரலானது.

சல்மான் கான்

சல்மான் கான்

இதற்கிடையே இந்தியில், சல்மான் கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் நடித்து வருகிறார், பூஜா ஹெக்டே. இதையடுத்து ரன்வீர் சிங் ஜோடியாக, ரோகித் ஷெட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சிர்கஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர். இன்னொரு ஹீரோயினாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார்.

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

இந்நிலையில், நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகி உள்ள மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியவர். இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

விஜய் படத்துக்காக, நடிகை பூஜா ஹெக்டேவிடம் ஹீரோயினாக நடிக்க, படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கிடையே, நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கில் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தின் ஷூட்டிங்கை இந்த மாத இறுதியுடன் முடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X