சாந்தோம் தேவாலயத்தில்.. பிரபல ஹீரோ மகனுடன் நடிகர் விஜய் அத்தை மகள் திருமணம்.. முடிவானது தேதி!

By

சென்னை: நடிகர் விஜய் அத்தை மகளுக்கும் பிரபல ஹீரோவின் மகனுக்குமான திருமண தேதி முடிவாகி இருக்கிறது.

Recommended Video

தற்கொலை செய்து கொண்ட சின்னதிரை பிரபலங்கள் | Sobhana, Vaishnavi

நடிகர் விஜய்யின் அத்தை மகள் சினேகா பிரிட்டோ. அதாவது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் தங்கை விமலாவின் மகள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தைத் தயாரித்துள்ள தொழிலதிபர் சேவியர் பிரிட்டோவின் மகள்.

படம் இயக்கவில்லை

படம் இயக்கவில்லை

சினேகா பிரிட்டோ, 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் 2-பாகத்தை டைரக்டு செய்தவர். இதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில், தமன்குமார், பிந்து மாதவி, ரீமா சென், பியா பாஜ்பாய் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. இதையடுத்து சினேகா பிரிட்டோ படம் இயக்கவில்லை.

குடும்பத்தினர் சம்மதம்

குடும்பத்தினர் சம்மதம்

தங்களது ஓட்டல் மற்றும் கல்வி நிறுவனங்களைக் கவனித்து வருகிறார் சினேகா பிரிட்டோ. இவரும் மறைந்த ஹீரோ, முரளியின் இளைய மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷூம் காதலித்து வந்தனர். சிங்கப்பூரில் படித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு முதலில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

பிறகு அவர்கள் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததால், இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்களின் திருமணம் முடிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் நடிகர் விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் இவர்கள் திருமண தேதி இப்போது முடிவாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

வரும் 23 ஆம் தேதி சென்னை சாந்தோமில் உள்ள தேவாலயத்தில் இவர்கள் திருமணம் நடக்கிறது. இப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், திருமணத்துக்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது. குறைவான விருந்தினர்களே இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X