வாவ்.. விஜய் வீட்டு திருமணம்.. அந்த பிரபல நடிகர் எப்படி குஷியா இருக்காரு பாருங்க.. சும்மா அள்ளுது!
சென்னை: தளபதி விஜய்யின் உறவுக்கார பெண்ணான சினேகா பிரிட்டோவுக்கும் நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
Recommended Video
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரெசார்ட்டில், குறைந்த குடும்ப உறுப்பினர்கள் சூழ இந்த திருமணம் நடைபெற்றது.
அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

களைகட்டிய நிச்சயதார்த்த விழா
வெளிநாட்டில் படித்து வந்த நிலையில், நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியும், சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பின்னர், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த டிசம்பர் 6ம் தேதி கோலாகலமாக நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

மேட்சிங் மேட்சிங்
தளபதி விஜய்யும் அதர்வா முரளியும் லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த அந்த நிச்சயதார்த்த விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இருவரும் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு மேட்சிங் மேட்சிங்காக கொடுத்த போஸ், ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து இருந்தது.

விஜய் வீட்டு திருமணம்
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவும், தளபதி விஜய்யும் உறவினர்கள் என மாஸ்டர் இசை வெளியிட்டு விழா மூலம் தெரியவந்தது. நடிகர் விஜய்யும் பேசும் போது, பிரிட்டோ அங்கிள் என்றே குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், தளபதி விஜய் வீட்டு திருமணமாகவே இந்த திருமணம் களை கட்டியது.

கல்யாணம் எப்போ
கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷுக்கும் தளபதி விஜய்யின் உறவுக்கார பெண்ணான சினேகா பிரிட்டோவுக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரெசார்ட்டில் குடும்ப உறவினர்கள் சூழ, சமூக இடைவெளியுடன் இந்த திருமணம் நடைபெற்றது. ஆனால், சில புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் தற்போது கசிந்து வைரலாகி வருகிறது.

சந்தோஷத்தில் அதர்வா
அப்பா முரளி மறைந்த நிலையில், நடிகர் அதர்வா தான் தனது தம்பியின் இந்த திருமணத்தை தலைமை ஏற்று நடத்தி உள்ளார். 31 வயதாகும் நடிகர் அதர்வா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளங்களில் கசிந்துள்ள புகைப்படத்தில், திருமண விருந்தை உண்ணும் இடத்தில் செம சந்தோஷத்தில் அதர்வா கை தட்டி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் கசிந்துள்ளன.

தளபதி தரிசனம்
மேலும், இந்த திருமணத்தில் தளபதி விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக திருமண புகைப்படங்களை நடிகர் அதர்வா அல்லது சேவியர் பிரிட்டோ தரப்பு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் திருமணத்தில் என்ன காஸ்ட்யூமில் எப்படி கலந்து கொண்டார் என்பதை காண பலரும் ஆர்வமுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











