விஜய் அப்படிப்பட்ட அப்பா இல்லை.. அவங்க வீட்டில் சங்கீதாதான் அப்படி.. சீக்ரெட் உடைத்த ஷோபா

சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்து மனு தாக்கல் செய்தார் சங்கீதா. அதோடு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார். அந்த வழக்கு விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விஜய்யிடமிருந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவுமேகூட ஒட்டுமொத்தமாக ஒதுங்கிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் சரியான அப்பாவாக நடந்துகொள்ளவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

விஜய்யின் ரசிகர்கள் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை எப்போதுமே மறக்கமாட்டார்கள். தங்கள் மனதில் விஜய்யையும், சங்கீதாவையும் கோயில் கட்டி வைத்திருந்தார்கள். ஆனால் சங்கீதாவோ அந்த மாதத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்தார். அந்த மனு மட்டுமின்றி விஜய் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை எல்லாம் வைத்திருந்தார். அதிலும் நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருக்கிறார் என்று சொன்னது தளபதி ரசிகர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. மேற்கொண்டு அவர்களுக்கு விஜய்யும், திரிஷாவும் ஒரு திருமணத்துக்கு ஜோடியாக வந்து ஷாக்கை கொடுத்தார்கள்.

Vijay s Parenting Style Shoba on Him and Sangeetha Amid Divorce Buzz
Photo Credit:

பிள்ளைகளின் நிலைமை: இதற்கிடையே விஜய்யும், சங்கீதாவும் கடந்த ஐந்து வருடங்களாகவே பிரிந்துதான் இருந்திருக்கிறார்கள். அப்போது மகன் ஜேசனும், மகள் திவ்யாவும் தந்தையிடமிருந்து ஒதுங்கி தாயின் அரவணைப்புக்குள் முழுவதுமாக சென்றுவிட்டார்களாம். அதன் காரணமாகத்தான் சாஷா வெளிநாட்டில் பட்டம் வாங்கியபோது விஜய் போகவில்லை. மகன் ஜேசன் திரைப்படம் இயக்குவதற்கு கமிட்டானபோது ஒரு வாழ்த்துகூட சொல்லவில்லை போல என்று எல்லோரும் விளாசிவருகிறார்கள்.

இவரெல்லாம் ஒரு அப்பாவா?: மேலும் இவரெல்லாம் ஒரு அப்பாவா?.. எவ்வளவுதான் பிரச்னை இருந்தாலும் பிள்ளைகளை எப்படி ஒதுக்க மனம் வந்தது என ஏகப்பட்ட கேள்விகளை முன்வைக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க ஜேசன் சஞ்சய் இப்போது சிக்மா படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அந்தப் படத்தில் தனது பெயரில் இனிஷியலுக்குகூட விஜய்யின் பெயரை அவர் பயன்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி இந்த விஷயத்தில் சங்கீதாவுக்கு பெரிய சப்போர்ட்டாக இருப்பதே சஞ்சய்தான். என்ன நடந்தாலும் தாயுடனேயே நிற்பது என இரு பிள்ளைகளும் முடிவெடுத்துவிட்டதாகவும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஷோபா பேட்டி: இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று திடீரென சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "எஸ்.ஏ.சந்திரசேகர் ஃப்ரெண்ட்லியான அப்பாதான். ஆனால் ஸ்ட்ரிக்ட்டாகவும் இருப்பார். ஆனால் விஜய்யோ ரொம்பவே ஃப்ரெண்ட்லியான அப்பா. அவர்கள் வீட்டில் சங்கீதாதான் எஸ்.ஏ.சி மாதிரி ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்கள் வீட்டில் நான் ரொம்பவே கூலாக இருப்பேன். சங்கீதாவுக்கு பிள்ளைகள்தான் எல்லாமே. விஜய்யையும், பிள்ளைகளையும் நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்.

லேட் நைட்டே கிடையாது: சஞ்சய்யை பார்க்கும்போது எனக்கு குட்டி விஜய்யை பார்ப்பது மாதிரிதான் இருக்கும். சஞ்சய்யும் ரொம்ப சேட்டை கிடையாது. அமைதியான பையன்தான். அவனும், திவ்யாவும் பேசிக்கொள்வது நன்றாக இருக்கும். அதேபோல் எங்கள் வீட்டில் லேட் நைட்டில் யாருமே வரமாட்டோம். அதிகபட்சம் 8.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவோம். 9 மணிக்கு தூங்கிவிட வேண்டும். அப்போதுதான் முகமெல்லாம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X