»   »  எவன் பார்த்த வேலைடா இது?: கோபத்தில் விஜய் 61 படக்குழு

எவன் பார்த்த வேலைடா இது?: கோபத்தில் விஜய் 61 படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 61 படத்தின் புகைப்படங்கள் கசிந்துவிடுவதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

தெறி படத்தை அடுத்து இயக்குனர் அட்லீ, விஜய் மீண்டும் சேர்ந்துள்ள படம் விஜய் 61. படத்தில் விஜய் அப்பா, 2 மகன்கள் என்று மூன்று கதாபாத்திரங்களில் வருகிறார்.

அப்பா விஜய்க்கு நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளார்.

ஐரோப்பா

ஐரோப்பா

விஜய் 61 படக்குழு ஐரோப்பாவில் உள்ளது. அங்கு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்து வருகிறது.

விஜய்

விஜய்

தற்போது விஜய் வேஷ்டி, சட்டையில் நிற்கும் புகைப்படம் கசிந்துள்ளது. விஜய் புகைப்படங்கள் அவ்வப்போது கசிவதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

சமந்தா

சமந்தா

விஜய் 61 படப்பிடிப்பில் சமந்தா வரும் ஜூன் மாதம் கலந்து கொள்கிறார். திருமணத்திற்கு முன்பு கையில் உள்ள படங்களில் நடித்து முடித்துவிட வேண்டும் என்று உள்ளார்.

பஞ்சாயத்து தலைவர்

பஞ்சாயத்து தலைவர்

படத்தில் விஜய் பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மேஜிக்மேனாக வருகிறார். மேஜிக் மேன் கதாபாத்திரம் குட்டீஸ்களை கவர என்று கூறப்படுகிறது.

English summary
Vijay 61 team is shocked as photos from the shooting get leaked every now and then.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil