மக்கள் திலகத்தின் மறு உருவமே.. பரபரக்கும் அரசியல் போஸ்டர்கள்.. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்?

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிடுவார் போல தெரிகிறது.

Recommended Video

Bigg Boss 4 Tamil Latest Update • Contestant List

அந்த அளவுக்கு தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அரசியல் போஸ்ட்டர்களாக மாவட்டம் மாவட்டமாக ஒட்டித் தள்ளுகின்றனர்.

தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒட்டப்பட்டிருக்கும் "மக்கள் திலகத்தின் மறு உருவமே" போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மக்கள் திலகத்தின் மறு உருவமே

மக்கள் திலகத்தின் மறு உருவமே

நாடோடி மன்னன், மாட்டுக்கார வேலன், குடியிருந்த கோயில் சிங் கெட்டப் போன்ற பலவிதமான எம்.ஜி.ஆர் லுக்கில் தளபதி விஜய் இருப்பது போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கும் போஸ்டர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்களால் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதிமுகவுடன் கிளாஷ்

அதிமுகவுடன் கிளாஷ்

தலைவா படத்தின் போதே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தளபதி விஜய்க்கும் பிரச்சனைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தலைவா படத்தின் ரிலீஸ் பிரச்சனை குறித்து பல மேடைகளிலும் நடிகர் விஜய் வெளிப்படையாக பேசியுள்ளார். சர்கார் படத்தில் வரலக்‌ஷ்மியின் வில்லி கதாபாத்திர சித்தரிப்பும் அதிமுகவினரை கொந்தளிக்க செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மாதிரி

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மாதிரி

சமீபத்தில் கொண்டாடப்பட்ட தளபதி விஜய்யின் பிறந்தநாள் மற்றும் நடிகர் விஜய்யின் திருமண நாள் என அனைத்து கொண்டாட்டங்களின் போதும், விஜய்யின் அரசியல் என்ட்ரியை எதிர்பார்த்தே அவரது ரசிகர்கள் போஸ்டர்களாக ஒட்டி வருகின்றனர். நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆராகவும், விஜய்யின் மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அதிமுகவினரை மிகவும் அப்செட் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆளப்போறான் தமிழன் 2021ல்

ஆளப்போறான் தமிழன் 2021ல்

"மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாட்சி தருக... வாத்தியார், மாஸ்டர், ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்-?" என தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் ஒட்டியிருக்கும் போஸ்டர்களை பார்த்தவுடன் ரஜினிக்கு முன்பாக விஜய் அரசியலில் களம் காண்பார் என்றே யோசிக்க தோன்றுகிறது.

அனுமதி இல்லாமலா

அனுமதி இல்லாமலா

நடிகர் விஜய்யின் அனுமதி இல்லாமலா இது போன்ற போஸ்டர்கள் மாவட்டம் தோறும் ஒட்டப்பட்டு வருகின்றன என்ற கேள்விகளும் சமூக வலைதளத்தில் எழுந்து வருகின்றன. தலைவா, மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து தனது படங்களில் அரசியல் நெடியை தூவி வரும் விஜய், அதிரடியாக அரசியல் களத்தில் குதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X