அன்றே கணித்த விஜய்.. DMK - ADMK வை சேர்த்து வைக்க?.. இப்படி கலாய்க்கறாங்களேப்பா

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், வழக்கத்தைக் காட்டிலும், நடிகரும் தவெக தலைவருமான விஜய் குறித்த பேச்சுதான் பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. எங்கு திரும்பினாலும், விஜய் எப்போது முதலமைச்சராக பதவி ஏற்பார்? அவர் அழைப்பு விடுத்த கட்சியினர் அவருக்கு ஆதரவு அளிக்கலாம் அல்லவா என்று எல்லாம் கேள்வி மீது கேள்வியாக எழுப்பி வருகிறார்கள். அப்படி இருக்கையில் ஒரு புறம் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளார் என்ற புரளி வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எதிர்க்கட்சியாக செயல்படும் என்று தெரிவித்துவிட்டார். அதேபோல் தவெக ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார். அப்படி இருக்கையில் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பது என்பது அரசியல் தற்கொ*லை என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Vijay s Poove Unakkaga Meme on DMK-ADMK Alliance Goes Viral Blue Sattai Maran Joins the Trolls

அன்றே கணித்த விஜய்: இப்படி இருக்கையில் விஜய் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் பூவே உனக்காக, அந்த படத்தின் கதைப்படி, பிரிந்து உள்ள இரண்டு குடும்பத்தை சேர்த்து வைக்க கதாநாயகன் விஜய் மிகவும் சிரமப்படுவார். அதற்காக தனது காதலையும் கூட தியாகம் செய்வார். அப்படித்தான் தற்போது திமுக மற்றும் அதிமுகவை இணைத்து வைக்க விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார் என்றும், இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பரவும் தகவல்கள் அப்படித்தான் உள்ளது என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது என்று பூவே உனக்காக பட போஸ்டரைப் பகிர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

Vijay s Poove Unakkaga Meme on DMK-ADMK Alliance Goes Viral Blue Sattai Maran Joins the Trolls

ப்ளூ சட்டை மாறன்: இந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், "அப்போ புரியல.. இப்போ புரியுது" என்று பதிவிட்டுள்ளார். இவரது போஸ்ட்டுக்கு திமுகவினர் சிலர், அதிமுகவுடன் கூட்டணி வைத்து தான் திமுக அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், நெட்டிசன் ஒருவரோ பூவே உனக்காக பட பாடல் வரிகளை மாற்றி, " மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது ஆட்சி மாற்றம் வருமே..அடடே நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா" என்று பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X