»   »  யூ சான்றிதழை வேட்டையாடிய "புலி" கொண்டாடும் ரசிகர்கள்

யூ சான்றிதழை வேட்டையாடிய "புலி" கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவான புலி திரைப்படத்திற்கு தணிக்கைக்குழுவினர் யூ சான்றிதழ் வழங்கியிருக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் வகையில் படம் அமைந்திருப்பதால் புலிக்கு யூ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

ஏற்கனவே புலி படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள், ப்ரோமோ பாடல் ஆகியவை வரிசையாக வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.


இந்நிலையில் நேற்று இப்படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.


இதனை #MajesticPuliCensoredWithU என்ற ஹெஷ்டேக்கை போட்டு ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர் விஜயின் ரசிகர்கள்.


புலி

புலி

மாபெரும் பொருட்செலவில் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் புலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹான், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். சுதீப், ஸ்ரீதேவி கபூர், பிரபு, வித்யூலேகா ராமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராக் ஸ்டார் தேவிஸ்ரீபிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு அமைத்துள்ளார். எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.


அக்டோபர் 1 ம் தேதி

அக்டோபர் 1 ம் தேதி

செப்டெம்பர் 17 ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று புலி திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். படவேலைகள் முழுமையாக முடிவடையாததால் அக்டோபர் 1 ம் தேதியில் புலி வெளியாகிறது.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும்படி, இப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருப்பதால் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு' சான்றிதழ் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். மேலும் படத்தில் எந்தவிதமான வன்முறைக் காட்சிகளையும் சிம்புதேவன் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து யூ சான்றிதழ்

தொடர்ந்து யூ சான்றிதழ்

ஏற்கனவே விஜய் நடித்த படங்களான காவலன், வேலாயுதம், ‘நண்பன், ‘துப்பாக்கி, ‘தலைவா, ‘ஜில்லா, மற்றும் கத்தி ஆகிய படங்கள் ‘யு' சான்றிதழ் பெற்றிருந்தது.இப்படங்களை தொடர்ந்து ‘புலி' படமும் ‘யு' சான்றிதழை பெற்றிருப்பது விஜய் ரசிகர்களை அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


புலிக்கு கிடைத்த நன்மை

புலிக்கு கிடைத்த நன்மை

தற்போது புலி திரைப்படம் யூ சான்றிதழை பெற்றிருப்பதால் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுமார் 30% தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும். இது படத்திற்கு மாபெரும் உதவியாக மாறியிருக்கிறது, இதனால் புலி யின் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கொண்டாடும் ரசிகர்கள்

தொடர்ந்து 8 வது முறையாக விஜயின் திரைப்படம் யூ சான்றிதழை பெற்றிருக்கிறது, இதனை #MajesticPuliCensoredWithU என்ற ஹெஷ்டேக்கை போட்டு ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர் விஜயின் ரசிகர்கள்.


டபுள் கொண்டாட்டம்

டபுள் கொண்டாட்டம்

புலி படத்தின் டிரெய்லரை இதுவரை சுமார் 60 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர், மேலும் புலி டிரெய்லரை இதுவரை 98,481 பேர் லைக் செய்திருக்கின்றனர். இன்னும் 2 ஆயிரம் லைக்குகளை பெறும் பட்சத்தில் இந்தியாவில் அதிக லைக்குகள் பெற்ற(1 லட்சம்) சல்மான் கானின் "கிக்" பட வரலாற்றை புலி முறியடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. மேலே சொன்ன தகவல்களால் மகிழ்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள் தற்போது யூ சான்றிதழும் கிடைத்திருப்பதால் உற்சாகத்தை டபுளாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.


புலி திரைப்படம் "யூ" சான்றிதழை கைப்பற்றியதால் தற்போது ஒட்டுமொத்த "புலி"படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
Read more about: vijay, puli, விஜய், புலி
English summary
Ilayathalapathy Vijay's movie "Puli" has been censored on Tuesday, 15 September and bagged clean chit from the Regional Censor Board. The makers of the film are now happy that the movie has been appreciated by the board members.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil