»   »  தள்ளாடினாலும் "டான்" என்று வந்து நின்ற "புலி".. குஷியில் ரசிகர்கள்!

தள்ளாடினாலும் "டான்" என்று வந்து நின்ற "புலி".. குஷியில் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயின் நடிப்பில் உருவான புலி திரைப்படத்தின் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்திருக்கின்றன. தற்போது புலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் இவர்களுடன் இணைந்து 25 வருடங்களுக்குப் பின்பு ஸ்ரீதேவி நடித்திருக்கும் படம் புலி. ஆக்க்ஷன் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக புலியை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.


Vijay's Puli Special Show Cancelled?

எதிர்பாராத ஒருசில காரணங்களால் புலி படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காலை 8 மணி சிறப்பு காட்சியும் திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டது.


இதனால் விஜயின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் ரசிகர்களின் வருத்தத்தைப் போக்கும் வகையில் புலி படம் தற்போது அனைத்து பிரச்சினைகளிலும் இருந்து மீண்டிருக்கிறது.


திருச்சியில் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணிக்கு புலி படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டு உள்ளது. சற்று முன்பு மதுரை திரையரங்குகளிலும் புலி திரைப்படம் வெளியாகியது.


மேலும் சென்னையில் நண்பகல் 12 மணிக்கு அனைத்து திரையரங்குகளிலும் புலி திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகிறது.புலி படத்தின் பிரச்சினை அனைத்தும் நீங்கியதால் தற்போது விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

Read more about: vijay, puli, விஜய், புலி
English summary
Vijay's Puli Movie Cleared all issues. Now the Movie Released Trichy and Madurai Cities,in Chennai Puli Released Afternoon Shows.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil