Don't Miss!
- News
"மதுபோதை.." புது மாப்பிள்ளை விபத்தில் பலி! மூன்றே நாளில் விதவையான இளம்பெண்! கண் முன்னே நடந்த கொடூரம்
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Technology
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
அச்சச்சோ.. அந்த ரஞ்சிதமே கிஸ் கூட காப்பியா? பாபா பாட்டுல இருந்து சுட்டதாக கிளம்பும் ட்ரோல்!
சென்னை: அரசனாக இருந்து கொண்டு இன்னும் தளபதின்னு சொல்லிட்டு இருக்காரு என பாடலாசிரியர் விவேக் பேசியதில் இருந்தே தளபதியில் இருந்து சூப்பர் ஸ்டாராக நடிகர் விஜய்யை வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பலரும் ப்ரமோட் செய்ய ஆரம்பித்தனர்.
தில் ராஜு பேசும் போது நம்பர் ஒன்.. நம்பர் ஒன் என பேசியதும், சரத்குமார் விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார் என பேசியதும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது.
குட்டி ஸ்டோரி முதல் விஜய் கொடுத்த அந்த ரஞ்சிதமே கிஸ் வரை எல்லாமே சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து சுட்டது தான் என வச்சி செய்து வருகின்றனர்.
விஜய் ரூட்டு நமக்கு வேண்டாம்... ரசிகர்களுடன் சூர்யா எடுத்த அதிரடி முடிவு...

தளபதி படம் வரலைன்னா
நடிகர் ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் வரலைன்னா இளைய தளபதி என்கிற பட்டத்தையோ தளபதி பட்டத்தையோ நடிகர் விஜய் சுமந்து கொண்டு திரிய மாட்டார் என அடுத்து அவர் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு டார்கெட் செய்கிறார் என புரிந்து கொண்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் பங்கமாக கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

குட்டி ஸ்டோரியே காப்பி தான்
அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன் டா என ரஜினி ரசிகராகவே தன்னை ஆரம்ப கால திரைப்படங்களில் காட்டி வந்த நடிகர் விஜய் ஆடியோ லாஞ்சில் சொல்லும் குட்டி ஸ்டோரியும் ரஜினிகாந்த் தனது சினிமா நிகழ்ச்சிகளில் சொல்லும் குட்டிக் கதையில் இருந்து சுட்டது தான் என்றும் இந்த முறை வாரிசு படத்தில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியையும் ரஜினிகாந்த் எப்பவோ சொல்லிவிட்டார் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.

ரஞ்சிதமே கிஸ் கூடவா
ரஞ்சிதமே பாடலில் நடிகர் விஜய் ஃபிளையிங் கிஸ் கொடுப்பது போல ஒரு நடன ஸ்டெப் போட்ட நிலையில், தற்போது புதுசா ஒரு கிஸ் மாட்டியிருக்கு இனிமே என் ரசிகர்களுக்கு இதைத்தான் கொடுக்கப் போகிறேன் என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கொடுத்தார். ஆனால், தற்போது அந்த கிஸ் ஸ்டைலும் ரஜினி கிட்டே இருந்து ஆட்டையை போட்டது தான் என பாடல் ஆதாரத்துடன் ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பாபா பாட்டில் இருந்து
பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்தது எதுக்கு உபயோகம் ஆனதோ தெரியவில்லை. ஆனால், ரஞ்சிதமே கிஸ் ஸ்டைலை அப்பவே பாபா பட பாடலில் நடிகர் ரஜினிகாந்த் மனிஷா கொய்ராலாவை பார்த்து பண்ணி விட்டார் என அந்த வீடியோ க்ளிப்பை ஷேர் செய்து ரஜினிகாந்த் ரசிகர்கள் சும்மா வச்சு செய்கின்றனர். நியூ இயர் கொண்டாட்டத்தை முன்னிட்டு வாரிசு இசை வெளியீட்டு விழா சன் டிவியில் வெளியாவதை பார்த்து விட்டு இன்னும் என்னவெல்லாம் கன்டென்ட் கிடைக்கப் போகுதோ!