எஸ்.ஏ.சந்திரசேகர் கால் தரையில் நிற்கவில்லை.. விஜய்யின் முறைப்பொண்ணு ஓபன் டாக்.. இவ்வளவு நடந்ததா?

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார். இன்னும் பெரும்பான்மை அவருக்கு கிடைக்காததால் ஆளுநர் இன்னும் பதவி ஏற்பதற்கு அழைப்பு விடுக்கவில்லை. அதற்கு கடுமையான கண்டனங்களும் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் விஜய்யின் முறைப்பெண்ணான விமலா ராணி பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வென்றிருக்கிறது. ஆனால் பெரும்பான்மாஇக்கு 118 தொகுதிகள் வேண்டும் என்பதால் பத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவை மற்ற கட்சிகளிடம் எதிர்பார்த்தது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு ஏற்பட ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களின் பலம் 113ஆக உயர்ந்திருக்கிறது. அதேசமயம் இன்னும் ஐந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பதால்; இன்னமும் அது கிடைக்கவில்லை. எனவே ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார்.

Vijay s Relative Vimala Rani Reacts Emotionally to His Election Victory
Photo Credit:

வலுக்கும் கண்டனங்கள்: ஆளுநரின் இந்த செயலுக்கு அனைவருமே கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினும் எங்களால் தவெக ஆட்சியமைப்பதற்கு எந்த இடையூறும் இருக்காது என்று தெளிவுப்படுத்திவிட்டார். மற்ற கட்சி தலைவர்களும்கூட, ஆட்சி அமைக்க விஜய்க்கு உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்கள். ஆளுநரோ அமைதியாகவே இருக்கிறார். 118 எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மையை நிரூபித்த பதவி பிரமாணம் செய்து வைக்க தயார் என்று ஆளுநர் தரப்பு தெளிவாக சொல்லிவிட்டதாம்.

Also Read
ஸ்டாலின் சாரை கிண்டல் செய்யாதீங்க.. கஷ்டமா இருக்கு.. விஜய் குடும்பத்திலிருந்து வந்த குரல்
ஸ்டாலின் சாரை கிண்டல் செய்யாதீங்க.. கஷ்டமா இருக்கு.. விஜய் குடும்பத்திலிருந்து வந்த குரல்

கமல் போட்ட ட்வீட்: இந்த விஷயத்தில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் ட்வீட் போட்டிருக்கிறார். அந்த ட்வீட்டில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்' என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.

இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம். '

பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல' என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார். கமல்ஹாசன் போன்ற்தான் தமிழ்நாட்டில் பலரும் சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யின் முறை பெண்ணான விமலா ராணி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

விமலா பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "ரிசல்ட் வந்து விஜய் வென்றுவிட்டார் என்று தெரிந்ததும் எஸ்.ஏ.சி மாமாவின் கால்கள் தரையில் நிற்கவே இல்லை. நான் மொத்தம் 125 சீட்டுகள் எதிர்பார்த்தேன். விஜய் வென்றுவிடுவார் என்று எங்களுக்கு நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. சந்திரசேகர் மாமாவுக்கு அப்போதிருந்தே அரசியல் மீது கவனம் இருக்கும். அதேதான் விஜய்க்கும் சென்றிருக்கிறது. கருவாக விஜய் இருக்கும்போதே இதெல்லாம் அவருக்குள் சென்றுவிட்டது என்றுதான் தோன்றுகிறது" என்றார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X