சொன்னா கேளுங்கப்பா ப்ளீஸ்: ரசிகர்களிடம் கெஞ்சிய விஜய்- வீடியோ இதோ
சென்னை: தன்னை பின்தொடர்ந்து வர வேண்டாம் என்று விஜய் தனது ரசிகர்களிடம் கேட்டுக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். சென்னையில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அங்கு படப்பிடிப்பு நடப்பது தெரிந்து ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
வேண்டாம்
படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் தனது ரசிகர்களை நோக்கி கையசைத்த வீடியோ வெளியானது. மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் விஜய்யை தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட மாட்டோமா என்ற ஆசையில் ரசிகர்கள் வருகிறார்கள்.
விஜய்
ரசிகர்கள் சிலர் விஜய் காரில் இருப்பதை பார்த்ததும் பைக்குகளில் அவரை பின்தொடர்ந்து தலைவா, தலைவா என்று கோஷமிட்டனர். விஜய் தனது கார் கண்ணாடியை இறக்கி தன்னை யாரும் பின் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

வேதனை
பைக்குகளில் தன் காரை பின்தொடர்ந்து வந்து ரசிகர்கள் யாருக்காவது ஏதாவது ஆகிவிட்டால் அதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் விஜய் அவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். தன்னை பார்ப்பதை விட ரசிகர்களின் உயிர் முக்கியம் என்று அவர் நினைக்கிறார். அதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏ.ஆர். ரஹ்மான்
தளபதி 63 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











