கில்லி தான்.. அசின் முதல் பூஜா ஹெக்டே வரை.. இத்தனை நடிகைகளின் உதட்டை கிள்ளியிருக்கிறாரா விஜய்!
சென்னை: பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவின் விஜய் கிள்ளி கொஞ்சுவது போல வெளியான புகைப்படம் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், ரொமான்ஸ் காட்சிகளில் இது விஜய்யின் ஒரு டிரேட் மார்க் என்றே ரசிகர்கள் இதற்குமுன் நடிகர் விஜய் தன்னுடன் நடித்த நடிகைகளின் உடலை கிள்ளியபடி கொடுத்த போஸ் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் இந்த போட்டோ மீம் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

லிப் லாக்
குஷி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் லிப் கிஸ் அடித்திருப்பார். ஆனால், பெரும்பாலும் நடிகைகளுக்கு லிப் கிஸ் அடிக்கும் காட்சிகளில் முன்னணி நடிகர்கள் நடிப்பதை தமிழ் சினிமாவில் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், லிப் கிஸ் காட்சிகளுக்கு பதிலாக நடிகைகளின் உதட்டை பிடித்துக் கிள்ளுவது போன்ற ரொமான்ஸ் காட்சிகளை விஜய் பட பாடல்களில் நடன இயக்குநர்கள் தொடர்ந்து வைத்து வருகின்றனர்.

போக்கிரி படத்தில்
பிரபு தேவா இயக்கத்தில் விஜய், அஜித் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் வரும் வசந்த முல்லை பாடலுக்கு முன்பாக நடிகை அசினுக்கு விசில் அடித்து தரும் விதமாக விஜய் அவர் உதட்டில் கை வைத்து செய்யும் ரொமான்ஸ் காட்சி மற்றும் மாம்பழமா மாம்பழம் பாடலில் அசினின் உதட்டை கிள்ளி விஜய் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தன. அந்த காட்சி ஹிட் ஆன நிலையில், தொடர்ந்து பல படங்களில் அதே போன்ற ஒரு காட்சி நடிகர் விஜய்யின் டிரேட் மார்க் ரொமான்ஸ் காட்சியாகவே மாறி விட்டது.

அனுஷ்கா உதட்டை
வேட்டைக்காரன் படத்தில் நடிகை அனுஷ்காவின் உதட்டை அதே போல கிள்ளி நடிகர் விஜய் பாடல் காட்சிக்கு முன்பாக பண்ணும் ரொமான்ஸ் காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. லிப் லாக் அடிக்காமல், இப்படி நடிப்பதும் நல்லா இருக்கேன்னு நடிகர் விஜய்யும் அதே பாணியை தொடர்ந்து பல படங்களில் செய்து வருகிறார்.

ஹன்சிகாவுடன்
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிப்பில் வெளியான புலி படத்தில் பாடல் காட்சி ஒன்றில் நடிகை ஹன்சிகாவின் உதட்டையும் இதே போல நடிகர் விஜய் பிடித்து கிள்ளி இருப்பார். தற்போது அந்த புகைப்படத்தையும் வைரலாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

மெர்சல் 'மாச்சோ'
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்ற மாச்சோ பாடலில் நடிகை காஜல் அகர்வாலின் உதட்டிலும் நடிகர் விஜய்யின் விரல் செம ரொமான்டிக்காக விளையாடி இருக்கும். பொதுவாகவே விஜய்க்கு நடனம் அமைப்பவர்கள் அந்த காட்சியை வைத்து விடலாம் என முடிவு செய்து விட்டே கொரியோகிராப் செய்கிறார்களோ என்கிற எண்ணமும் ரசிகர்கள் மத்தியில் தோன்றுகிறது.

கீர்த்தி சுரேஷ் உதட்டிலும்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்க்கார் படத்தில் OMG பொண்ணு பாடலில் நடிகை கீர்த்தி சுரேஷின் உதட்டையும் கிள்ளி கொஞ்சியிருப்பார் நம்ம கில்லி விஜய். சர்கார் படத்திற்கு பிறகு அந்த ஸ்டைல் கொஞ்சம் காலம் இல்லாத நிலையில், ஜானி மாஸ்டர் மீண்டும் அதே விஷயத்தை பீஸ்ட்டிலும் இறக்கி உள்ளார்.
Recommended Video

பீஸ்ட் படத்திலும்
பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து லிரிக் வீடியோ வெளியாகி 200 மில்லியன் பார்வைகளை அதிவேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாளை செகண்ட் சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலும் வெளியாக காத்திருக்கிறது. இதற்கிடையே ஹலமதி ஹபிபோ பாடலில் பூஜா ஹெக்டேவின் உதட்டை விஜய் கிள்ளியபடி போஸ் கொடுக்கும் ஸ்டில்கள் வெளியாகி இந்த போட்டோ மீம் டிரெண்டிங்கை ஆரம்பித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications