Vijay: வீட்டை இடிக்கும் விஜய்.. தேர்தல் முடிவுக்கு முன்னரே.. காரணம் என்ன?

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் மே 4 ஆம் தேதிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் தரப்பில் முதல் தேர்தலிலேயே பிரமாண்ட வெற்றியை பெற்று முதலமைச்சர் ஆகிவிட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தவெகவில் சிலரோ, ஆட்சியைப் பிடிப்பது சிரமம் தான், ஆனால் தேர்தலில் பெரிய தாக்கத்தை உருவாக்கிட முடியும் என உட்கட்சியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் தேர்தல் முடிவுகளுக்குக்குள் விஜய்யின் வீடு இடிக்கப்பட உள்ளது என்றும் அதற்கு மிகவும் முக்கியமான காரணமும் உள்ளது என்றும் வலைபேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

அதாவது தற்போது விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அதேபோல் அவரது கட்சி அலுவலகம் சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் முதலில் தங்கி இருந்த, வீடான சென்னை சாலிகிராமம் பகுதியில் இருக்கும் அவரது வீட்டை இடிக்க அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் முடிவு செய்துள்ளாராம். இது தொடர்பான தகவலை ஏற்கனவே பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார். அந்த வீட்டை இடித்துவிட்டு, பெரிய அப்பார்ட்மெண்ட் கட்ட உள்ளாராம்.

Vijay s Saligramam House Set for Demolition Here s the Real Reason

இடிக்கப்படவுள்ள பெரிய வீடு: இது தொடர்பாக வலைபேச்சு அந்தணன் கூறுகையில், "விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ஸ்டூடியோ இருந்தது. தற்போது அவரும் அங்கிருந்து வெளியேறி விட்டார். அதேபோல் எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகம் இருந்தது. அதையும் அவர் காலி செய்து, அந்த வீட்டை இடித்து பெரிய அப்பார்ட்மெண்ட் கட்ட உள்ளார்.

அன்னதானம்: அதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு நாள்தோறும் சுமார் 200 பேருக்கு மதிய நேரத்தில் உணவு போட்டுக் கொண்டு இருந்தனர். இனி வீட்டை இடித்து விட்டால் இந்த அன்னதானத்தை நடத்த முடியாத நிலை ஏற்படுமே" என்று தெரிவித்தார்.

Vijay s Saligramam House Set for Demolition Here s the Real Reason

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க: இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வந்தாலும், ஒரு வாரத்திற்குள் இந்த வீட்டை இடித்து, அப்பார்ட்மெண்ட் கட்டும் பணிகளை தொடங்க மிகவும் முக்கியமான காரணமும் உள்ளது. காரணம், அந்த வீடு பழமையானதாக மாறிவிட்டது. அந்த வீட்டை இடிக்கலாம் என்று முடிவு செய்த பின்னர், அதை தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே தொடங்குவதுதான் சரி. இல்லை என்றால் தேர்தலில் விஜய் மற்றும் அவரது கட்சியினர் வென்று விஜய் முதலமைச்சர் ஆன பின்னர் வீட்டை இடித்து அப்பார்மெண்ட் கட்டினால் அதை, ஊழல் செய்து அப்பார்மெண்ட் கட்டுகிறார் என்று விமர்சிக்கக் கூடும் என்று சிலர் பேசி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X