கருணாநிதி மரணம்.. அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பு ரத்து.. டிவிட்டரில் முருகதாஸ் இரங்கல்

கருணாநிதி மறைவையொட்டி, சர்கார் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

கருணாநிதி மரணம்...அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பு ரத்து..வீடியோ

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, அமெரிக்காவில் நடைபெற்று வந்த விஜயின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

Vijays Sarkar shooting stopped

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டிவிட்டர் வாயிலாகவும் இயக்குநர் முருகதாஸ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர், "தமிழ் தாய் தன் தலை மகனை இழந்து தவிக்கிறாள்..தமிழகம் தன் தலைவனை இழந்து தவிக்கிறது..கண்ணீர் அஞ்சலி ஐயா.." எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X