மாஸ்டர் ஷூட்டை முடித்த விஜய்.. நெய்வேலிக்கு நன்றி.. பிரபலங்கள் கொண்டாடும் செல்ஃபி போட்ட்டோ!
Recommended Video
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் நெய்வேலி ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்றும் தனது ரசிகர்களுடன் பேருந்து மீது ஏறி நடிகர் விஜய் செல்ஃபி எடுத்துள்ளார்.
நேற்று விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம் இந்தியளவில் டிரெண்டான நிலையில், தற்போது அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, Thankyou Neyveli என பதிவிட்டுள்ளார்.
தேங்யூ நெய்வேலி
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப் பட்ட வந்த நிலையில், தற்போது, அங்கு ஷூட்டிங் முடிந்ததை கொண்டாடும் விதமாகவே நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பதிவிட்டுள்ளார்.
உலகளவில் டிரெண்டிங்
தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட அந்த ஒரு செல்ஃபி புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அதனை உலகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். #ThalapathyVIJAYselfie, #ThalapathySelfie என இரு ஹாஷ்டேக்குகளை உருவாக்கி புள்ளிங்கோ தெறிக்க விட்டு வருகின்றனர்.
இன்றும் ரசிகர்களுடன்
வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து, நெய்வேலி என்.எல்.சியில் நடிகர் விஜயை காண ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகளவில் திரண்டு வருகிறது. நேற்று ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து செல்ஃபி எடுத்த நடிகர் விஜய், இன்றும் பேருந்து ஒன்றின் மீது ஏறி, ரசிகர்களுக்கு கையசைத்து தனது நன்றியை தெரிவித்தார்.
விஜய் பவர்
தளபதி விஜய்யின் பவர் என்ன என்பதை அவரது இந்த ஒரு செல்ஃபி இந்தியாவுக்கு உணர்த்தி இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும், கீழே உள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவரும், நடிகர் விஜய் செல்ஃபி எடுக்கும் போது, தனது மொபைலில் அவரை போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தது செம்ம வைரல் ஆகிறது.
இது போதும் எங்களுக்கு
நாடோடிகள் 2, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள கோவை பொண்ணு அதுல்யா ரவி, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. தற்போது விஜய் போட்ட ட்வீட்டை ஷேர் செய்து, இது போதும் எங்களுக்கு இது போதுமே என ஹார்ட்டீன் போட்டு, அந்த ஸ்மைல் செம்ம சூப்பரா இருக்கு சார் என ட்வீட் போட்டு அசத்தியுள்ளார்.
சூப்பர் மாஸ்டர்
மாநகரம், கைதி படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு, தனது 64வது படத்தை இயக்க நடிகர் விஜய் வாய்ப்பு வழங்கி உள்ளார். கைதி படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து தரமான சம்பவம் ஒன்றை மாஸ்டர் பெயரில் அவரும் செய்து வருகிறார். விஜய் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து சூப்பர் மாஸ்டர் என கமெண்ட் செய்துள்ளார் லோகேஷ்.
மாஸ்டர் செல்ஃபி
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரும், மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஷாந்தனு விஜய்யின் செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்து மாஸ்டர் செல்ஃபி என பதிவிட்டு தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளார். விஜய் ரசிகர்கள், அவரது ட்வீட்டுக்கு கீழே மக்களின் தலைவர் தளபதி வாழ்க என கமெண்ட்டுகளை பறக்க விடுகின்றனர்.
அசையும் சொத்துக்கள்
மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் காரில் அழைத்துச் சென்று, கிட்டத்தட்ட 23 மணி நேரம் விஜய் வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர், அவரிடம் இருந்து எந்த ரொக்கத்தையும் கைப்பற்றவில்லை என செய்திகள் வெளியான நிலையில், ரசிகர்கள் தான் விஜய் கணக்கில் காட்டாத அசையும் சொத்துக்கள் என ரத்னகுமார் ட்வீட் போட்டுள்ளார்.
ஆஸ்கரை விட
ஜெயம் ரவி, காஜல் அகர்வாலை வைத்து கோமாளி எனும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், விஜய் செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்து, ஆஸ்கரா? இத விட பெருசா ஆஸ்கர்? என மாஸ் ட்வீட் போட்டுள்ளார். ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்பட்ட நிலையில், அவரது இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
இதய தளபதி
தளபதி 65 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் இவர் தான் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விஜய்யின் மாஸ்டர் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து இதய தளபதி என கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார். தளபதி ரசிகர்கள் அவரது ட்வீட்டையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.. இவர்களை போல மேலும், பல பிரபலங்களும் இதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











