இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

By Shankar

கோலிவுட்டின் சமீபத்திய கருப்புக் குதிரையான விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகமெங்கும் வெளியாகிறது.

ப்ளாக் காமெடி

ப்ளாக் காமெடி

தமிழ் சினிமாவின் புதிய ட்ரெண்ட் ப்ளாக் காமெடி. அது என்ன ப்ளாக் காமெடி? கெட்ட வார்த்தைகளை ம்யூட் செய்துவிட்டு வருவதுதான் ப்ளாக் காமெடி என்றுதான் இன்றைக்கு புதிய இயக்குநர்கள் சிலர் நினைத்துக் கொண்டு காட்சிகள் அமைக்கின்றனர். இந்தப் படம் அப்படியில்லாமல், ஒரு காட்சியில் ஒளிவு மறைவாக உள்ள நகைச்சுவையை உணர்ந்து ரசிக்கும்படி உள்ளதுதான் ஸ்பெஷல்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சுந்தரபாண்டியன், பிட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவுவும் என தொடர்ந்து நான்கு வெற்றிப் படங்களில் கடந்த ஆண்டு நடித்து முன்னணி ஹீரோக்களின் வயிற்றில் புளி கரைத்தவர் விஜய் சேதுபதி. இந்தப் படமும் நிச்சய ஹிட் எனும் வகையில் கலகலப்பாக வந்துள்ளதால், சீக்கிரமே முதல் நிலை ஹீரோக்கள் வரிசையில் வந்துவிடும் வாய்ப்பு எக்கச்சக்கம்!

ரவுத்திரம் கோகுல்

ரவுத்திரம் கோகுல்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்கை ரவுத்திரம் படத்தை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன அஸ்வின் காகுமானு, ஸ்வாதி ரெட்டி, நந்திதா ஆகியோர் நடித்துள்ளனர்.

யு சான்று

யு சான்று

படத்தைப் பார்த்த சென்சார் குழு படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளது. எந்தக் கட்டும், வசனங்களுக்கு எந்தக் கட்டும் ம்யூட்டும் இல்லை.

சுமார் மூஞ்சு குமாரு

சுமார் மூஞ்சு குமாரு

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பெயர் சுமார் மூஞ்சி குமாரு. ஆனால் இயக்குநர் கோகுல் கூறுகையில், "பேருதாங்க சுமார் மூஞசி குமாரு. ஆனால் நிஜத்துல விஜய் சேதுபதி ஒரு சூப்பர் குமாரு. அவரது பாடி லாங்குவேஜ் அபாரம்", என்கிறார்.

200 ப்ளஸ் அரங்குகள்

200 ப்ளஸ் அரங்குகள்

இந்தப் படம் இன்று 200 க்கும் அதிகமான அரங்குகளில் இன்று வெளியாகிறது. விஜய் சேதுபதி படம் இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுதான் முதல் முறை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X