Vijay: தலைமைச் செயலகத்தில் விஜய் கொடுத்த ரியாக்ஷன்.. அடடே இதை கவனிங்கப்பா..
சென்னை: நடிகர் விஜய் தனது பிரச்சாரத்திற்கு சில தேர்தல் அதிகாரிகள் அனுமதி தர மறுக்கிறார்கள் மேலும் அவர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் எனவே அவர்களை பணி மாற்றம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி, அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விஜய்யே நேரடியாக சென்று கொடுத்தார். இதற்காக தலைமைச் செயலகத்திற்குச் சென்ற அவரை பத்திரிகையாளர்கள் சூழந்து கொண்டதால் அவரால் தலைமைத் தேர்தல் அதிகாரியை அறைக்குச் செல்லவே பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இப்படி இருக்கும்போது, நடிகர் விஜய்யை பத்திரிகையாளர்கள் பலரும் கேள்வி கேட்டு மைக்கை நீட்டினர். ஆனால் அவர் பதில் ஏதும் கூறாமல், தலைமைத் தேர்தல் அதிகாரி அறையை நோக்கி சென்றார். அவருடன் தவெகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களான செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

ரியாக்ஷன்: பத்திரிகையாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடியை விஜய் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேலும் அவருடன் வந்த நிர்வாகிகளும் எதிர்பார்க்கவில்லை. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தரைத்தளத்தில் இருந்து லிப்ட்டில் தலைமைத் தேர்தல் அதிகாரி இருக்கும் தளத்திற்குச் சென்றார். லிஃப்ட்டுக்குள் சென்றதுமே, அங்கிருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து, தனது இரண்டு கைகளையும் மெல்ல தூக்கியவாறு, ஆல் - ஓகே என்பது போல செய்தார். அதேபோல் செங்கோட்டையன் லிஃப்ட்டுக்குள் வந்ததும் இதுபோலத்தான் செய்தார். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
விமர்சனம்: அதேபோல் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்தித்தும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் பேசி இருக்கலாம் என்றும், அவர் ஏன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை என்றும் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். மேலும் விஜய் பத்திரிகையாளர்கள சினிமாவில் மட்டும் தான் சந்திப்பார், நிஜத்தில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க இன்னும் சில காலம் எடுக்கும் என்றும் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் அவரால் எப்படி இந்த தேர்தலில் அவருக்கு சாதகமான முடிவுகளை எட்டுவார் என்றும் பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











