விஜய் தங்கை பற்றி அறியாத பக்கங்கள்.. ஃபீலிங்கோடு சொன்ன அக்கா.. என்னவெல்லாம் நடந்தது?

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பற்றித்தான் எங்கும் பேச்சாக இருக்கிறது. இத்தனை வருடங்கள் தமிழ்நாட்டின் அதிகார மையங்களாக இருந்த திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு அரியணைக்கு ஏறியிருக்கிறார். நிச்சயம் இது ஒரு சாதனைதான். சூழல் இப்படி இருக்க அவர் பற்றி அவரது நெருங்கிய உறவினரான விமலா ராணி பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்தான் இப்போது மாநிலத்தின் ஹெட்லைன்ஸ். தேசிய ஊடகங்கள்வரை அவரது செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துவருகின்றன. முதன்முறையாக ஆட்சிக்கு வந்திருப்பதால் அவருக்கு சில தடுமாற்றங்கள் இருப்பது என்னவோ உண்மைதான்; ஆனால் கடந்த திமுக, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நல்ல திட்டங்களுக்கு எந்த குந்தகமும் விளைவிக்காமல் ஆட்சியை நடத்துவது அனைவரிடமுமே பெரிய பாராட்டை பெற்றிருக்கிறது.

Vijay s Sister Vidhya s Death Still Hurts Family Says Cousin Vimala Rani
Photo Credit:

சிம்ப்பிள் சி.எம்?: அதேபோல் விஜய்யின் ஒவ்வொரு அசைவும் ஒரு நியூஸ் கார்டாக சோஷியல் மீடியாவில் பரவுகின்றன. அதிலும் தலைமை செயலகத்துக்கு மதிய சாப்பாட்டோடு காலை 9.55 மணிக்கே வந்துவிடுகிறார்; மாலை நான்கு மணிக்கு செல்கிறார். அலுவலகம் வருவது போல் அவ்வளவு சின்சியராகவும், சிம்ப்பிளாகவும் இருக்கிறார் என்றும் பேசப்பட்டன. ஆனால் அதெல்லாம் போலியான ஒன்று; வேண்டுமென்றே விஜய் என்னும் பிம்பத்தை மேற்கொண்டு ஊதி பெரிதாக்குகிறார்கள் என்பது ஆளுங்கட்சியின் வாதமாக இருக்கிறது.

Also Read
Karuppu Day 4 Box Office - கருப்பு 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலை என்ன?
Karuppu Day 4 Box Office - கருப்பு 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலை என்ன?

குடும்பத்தினர் மகிழ்ச்சி: விஜய்யின் குடும்பத்தை பொறுத்தவரை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதேபோல் அவரது உறவினர்களும்; தங்கள் வீட்டிலிருந்து ஒரு முதலமைச்சர் என்ற ஆச்சரியத்தில் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது மனைவி விஷயத்தை பொறுத்தவரை கடந்த மாதத்தில் விவாகரத்து மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூன் 15ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி.

என்ன நடக்கும்?: அநேகமாக அன்றைய தினம் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்துவிடும் என்றே தெரிகிறது. சங்கீதா தரப்பு கேட்ட ஜீவனாம்சத்தையும் விஜய் கொடுப்பதற்கு முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க விஜய்யின் அக்காவான விமலா ராணி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், 'விஜய்யின் தங்கை வித்யா இறந்தபோது நானுமே கொஞ்சம் சின்ன பொண்ணுதான். வித்யா இறந்தநாள்தான் என்னுடைய அண்ணனின் பிறந்தநாள்.

கஷ்டப்பட்டாங்க: ஆனால் வித்யா நிறைய கஷ்டப்பட்டாங்க என்று தெரியும். நிறைய மாத்திரைகள், ஊசியெல்லாம் இருந்தது. வித்யா இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என இப்போதும் எங்களுக்கு தோன்றுகிறது. ஒரு குழந்தையை தவறவிடுவதை யாருமே விரும்பமாட்டார்கள். உடன் பிறந்தவர்கள் என்பது எப்போதுமே ஒரு பலம். அந்த பலம் அவருக்கு இல்லை. ஒரு தங்கையை இழந்தாலும் இன்று பல தங்கைகளை விஜய் சம்பாதித்திருக்கிறார். அந்த வலி அவருக்கு பன்மடங்கு இன்பமாக அவருக்கு மீண்டும் வந்திருக்கிறது" என்றார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X