விஜய் சொன்ன அந்த 'ஒத்த' வார்த்தை: குஷியான முருகதாஸ்
சென்னை: கத்தி படத்தின் முழு கதையையும் கேட்ட விஜய் சூப்பர்ணா என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியது தன்னால் மறக்கவே முடியாது என இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தை அடுத்து கத்தி படத்தில் மீண்டும் முருகாதஸுடன் சேர்ந்து பணியாற்றுகிறார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா.
இந்நிலையில் கத்தி குறித்து முருகதாஸ் மனம் திறந்துள்ளார்.

கத்தி ஏன்?
படத்திற்கு ஒரு காரணத்தோடு தான் கத்தி என்று பெயர் வைத்துள்ளோம். இது கதைக்கு பொருத்தமாக இருக்கும். சும்மா ஒன்றும் கத்தி என பெயர் வைக்கவில்லை என்றார் முருகதாஸ்.

அப்பா, மகன்
கத்தி படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஆனால் அது அப்பா, மகனாக இல்லை. அவர் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சமந்தாவின் பெயர் அங்கிதா.

சூப்பர்ணா
கத்தி படத்தின் முழுகதையையும் கேட்ட விஜய் எனக்கு 'சூப்பர்ணா' என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அவர் துப்பாக்கி படத்தின்போது கூட இப்படி எல்லாம் கூறியது இல்லை. இது விஜய்க்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்று முருகதாஸ் தெரிவித்தார்.

ஹாலிடே
துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கான ஹாலிடே பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பிய சந்தோஷத்தில் உள்ளார் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











