விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா.. ஹீரோ பிறந்தநாளுக்கு செய்த சூப்பர் விஷயம்
சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிக்மா. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களாக நடந்துவந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில்தான் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. படமும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தந்தை மாதிரியே சினிமாவில் பெரிய இடத்தை பிடிப்பதற்கான அச்சாரத்தை இந்தப் படம் பிடிக்குமா என்ற கேள்வி எழுப்பியிருக்கிறது.
நடிகராக இருந்த விஜய் இப்போது தவெக தலைவராக மாறிவிட்டார். மேலும் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சராகவும் அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அவரது மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் இயக்கம் தொடர்பான படிப்பை படித்துவிட்டு இயக்குநராகும் முயற்சியில் இறங்கினார். அவரது முயற்சிக்கு விஜய் சைடிலிருந்து எந்த சப்போர்ட்டும் வரவில்லை என்று அப்போதே கூறப்பட்டது. பிறகு திடீரென லைகா தயாரிப்பில் சிக்மா படத்தை சஞ்சய் இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியானது.

சங்கீதாவின் தரப்பு காரணம்?: விஜய் செய்யாத சிலவற்றை சங்கீதா தரப்புதான் செய்ததாக கூறப்பட்டது. அதாவது லைகா நிறுவனத்துக்கும், சங்கீதா குடும்பத்துக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் முயற்சியில்தான் சஞ்சய்க்கு இந்த வாய்ப்பு வந்ததாகவும் தகவல்கள் வட்டமடித்தன. எப்படியோ ஒப்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தாகி படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பித்துவிட்டார். ஹீரோவாக சஞ்சய் கிஷன் கமிட்டாகியிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார்.
சுமார் வரவேற்பை பெற்ற ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் கடந்த வருடத்தில் வெளியானது. படத்தின் கதைக்கருவாக பணம்தான் இருக்கிறது என்பதை ட்ரெய்லர் உறுதி செய்தது. மேக்கிங்கிலும் கொஞ்சம் பக்குவம் இருந்தாலும் கதைக்களத்தை பார்க்கையில் இந்தப் படம் மெகா ஹிட்டாகுமா என்ற சந்தேகத்தையும் கிளப்பியது. இருந்தாலும் கண்டிப்பாக ஹிட்டாகும் என்பது திரைத்துறையில் சிலரின் நம்பிக்கை. படமானது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தீப் கிஷன் பிறந்தநாள்: இந்நிலையில் சிக்மா ஹீரோ சந்தீப் கிஷன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு கையில் துப்பாக்கியுடனும், ஒரு கையில் பணத்துடனும் போஸ் கொடுத்திருக்கிறார் சந்தீப். உண்மையில் இந்த போஸ்டர் செம ஸ்டைலிஷாக இருக்கிறது. ஆனால் இந்த ஸ்டைலிஷும், ரிச் லுக்கும் படம் முழுக்க ட்ராவல் ஆக வேண்டுமே. அதை சரியாக கையாண்டிருப்பாரா சஞ்சய்?


Click it and Unblock the Notifications
