திடீரென வைரலாகும் நடிகர் விஜய் மகனின் அசத்தல் குரூப் போட்டோ.. கனடாவில் எடுக்கப்பட்டதா..?
சென்னை: நடிகர் விஜய் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார்.
படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்தபின் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய் மறுப்பு
இதற்கிடையே, கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துகள் முடக்கப்பட்டதால், சஞ்சய் அங்கு தவித்து வருவதாகவும் இதனால் விஜய் கவலை அடைந்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகி இருந்தன. இதை நடிகர் விஜய் மறுத்திருந்தார். தனது மகன் நன்றாக இருக்கிறார் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடிகர் விஜய், அவரிடம் தினமும் போனில் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விஜய் சேதுபதி
இதற்கிடையே விஜய் மகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தெலுங்கில் உருவாகி வரும் படம், உப்பெனா. இதை புச்சிபாபு சனா இயக்குகிறார். இதில், பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஹீரோயினுக்கு தந்தையாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
Recommended Video

ரீமேக் உரிமை
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் ரிலீஸுக்கு முன்பே, தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கி இருப்பதாகவும் இந்தப் படத்தில் விஜய் மகன் சஞ்சய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று விஜய்யிடம் கதை சொன்னதாகவும் அதற்கு அவர் ஓகே சொன்னதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி யாரும் உறுதிப்படுத்தவில்லை.

குரூப் போட்டோ
இந்நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய், தன்னுடன் படித்த நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் இப்போது திடீரென வைரலாகி வருகிறது. இந்த போட்டோ அவர் சென்னையில் படித்தபோது எடுக்கப்பட்டது என்றும் வெளிநாட்டு மாணவர்களும் இருப்பதால் இது கனடாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











