சிக்கல் இல்லாமல் ரிலீஸாகும் சிக்மா.. நன்றி தெரிவித்த விஜய் மகன் ஜேசன் சஞ்சய்?.. என்ன சொன்னாரு?
சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராஜூசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அப்படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார். லைகா தயாரித்திருக்கிறது. நீண்ட காலம் நடந்த படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக நிறைவடைந்து ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது. அதன்படி ஜூலை 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ஜேசன் நன்றி தெரிவித்திருப்பதாக இணையத்தில் ஒரு பதிவு உலா வருகிறது.
விஜய் நடித்த போக்கிரி, வேட்டைக்காரன் பட பாடல்களில் சில நிமிடங்கள் மட்டும் தலை காட்டினார் மகனார் ஜேசன் சஞ்சய். சிறு வயதிலேயே கேமரா முன்பு தோன்றிவிட்டதால் கண்டிப்பாக அவரது தந்தை மாதிரி நடிகராக வருவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ வெளிநாட்டுக்கு சென்று இயக்கம் தொடர்பான படிப்பை படித்து இயக்குநராகிவிட்டார். முதல் படமே பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா பேனரில் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

யார் வாங்கி கொடுத்த வாய்ப்பு?: இளம் வயதிலேயே அவர் இயக்குநராகும் வாய்ப்பை பெற்றது பலரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒருதரப்பினரோ இது முழுக்க முழுக்க நெப்போட்டிஸம் என குற்றச்சாட்டை வீசினார்கள். இன்னொரு தரப்போ இந்த வாய்ப்பை விஜய் வாங்கிக்கொடுக்கவில்லை; லண்டனில் இருக்கும் சங்கீதாவும் அவரது தரப்பும்தான் வாங்கி கொடுத்ததாகவும் கூறியது. ஆகமொத்தம் திறமை இல்லாமல் இந்த வாய்ப்பு ஜேசனுக்கு கிட்டியிருக்காது என்பது மட்டும் உண்மை.
இனிஷியலை தவிர்த்த ஜேசன்: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து மும்முரமாக நடந்தது. ட்ரெய்லர் வெளியாகியும் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸை பெற்றது. முதலில் வெளியான ட்ரெய்லர் முடிவில், ஜேசன் சஞ்சய் எஸ் என்று குறிப்பிட்டிருந்தார். தந்தைக்கும், தாய்க்கும் நடக்கும் விவாகரத்து பிரச்னையில் தாய் சங்கீதா பக்கம் நிற்பதால்தான் அவர் இந்த மாதிரி ஒரு செயலை செய்திருக்கிறார் என கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், வெறும் ஜேசன் சஞ்சய் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜேசன் சொன்ன நன்றி?: இந்நிலையில் ஜேசன் சஞ்சய் நன்றி தெரிவித்திருப்பதாக ஒரு பதிவு வெளியாகியிருக்கிறது. அதன்படி, "என் மேல் நம்பிக்கை வைத்து ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. சிக்மா எனக்கு சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக அமைந்தது. எனது கதையில் நம்பிக்கை தொடர்ந்து ஆதரவு கொடுத்த லைகாவின் சுபாஸ்கரனுக்கு நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. ஜூலை 31ஆம் தேதி சிக்மாவை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலோடு காத்திருக்கிறேன்" என கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவானது Jason Sanjay Official என்ற சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது சஞ்சய்யின் அதிகாரப்பூர்வ பக்கமா இல்லை ரசிகர்கள் நிர்வகிக்கும் பக்கமா என்பதில் நெட்டிசன்கள் குழப்பமடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
