ஏன் இப்படி?.. அப்படியே அப்பா மாதிரி மேனரிஸம்.. விஜய் மகன் கலக்குறாரே பாஸ்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தீப் கிஷனை வைத்து அவர் இயக்கிவரும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருவதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறுவார் என்று விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய் இப்போது அரசியல் பிரவேசம் செய்து ஏகப்பட்ட சங்கடங்களை சந்தித்துவருகிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம்தான் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க அவரது மகனான ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் அவரை கொண்டாடலாம் என்று தளபதி ரசிகர்கள் கணக்கு போட்டிருந்தார்கள்.

ஜேசன் கொடுத்த ட்விஸ்ட்: ஆனால் அவரோ தனது தந்தை வழியை பின்பற்றாமல் தாத்தா வழியை பின்பற்றியிருக்கிறார். கனடா நாட்டில் சினிமா தொடர்பான படிப்பை படித்த அவருக்கு இயக்குநர் ஆசைதான் துளிர்விட்டிருக்கிறது. படிக்கும்போதே குறும்படம் எடுத்த அவர்; கோலிவுட்டில் இயக்குநராகும் முடிவில் இருந்தார். அவரது முடிவுக்கு லைகா நிறுவனம் துணை நின்றது. படத்தின் பூஜையும் போடப்பட்டது.

Vijay s Son Jason Sanjay Trending Airport Video Fans Say Just Like Thalapathy

ஒத்துக்கொள்ளாத ஹீரோக்கள்: தனது கதையை கவின், ஜீவா உள்ளிட்டோரிடம் அவர் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் யாருமே ஒத்துக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. சூழல் இப்படி இருக்க சந்தீப் கிஷனை வைத்து முதல் படம் இயக்கும் வேலையை தொடங்கினார் ஜேசன். தமன் அப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகி பட்டையை கிளப்பின.

மும்முரமான ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருவதாக கூறப்பட்டது. இதில் தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக ஜேசன் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என்று அவர் உட்பட படத்தில் பணியாற்றும் அனைவருமே சொல்லிவருகிறார்கள். இதன் காரணமாக படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டாகும் வீடியோ: படத்தின் ஷூட்டிங் இப்போது எந்த நிலைமையில் இருக்கிறதென்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது விமான நிலையத்துக்கு வந்த அவரை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்தார். உடனே ஜேசனோ ஏன் இப்படி என சைகையில் கேட்டார். அது அப்படியே விஜய் மாதிரி இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே அப்படியே விஜய் மாதிரியே இருக்கிறார். பேசாமல் ஹீரோவாகியிருக்கலாமே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X