கொரோனா லாக்டவுனால் கனடாவில் சிக்கிய.. நடிகர் விஜய் மகன் சென்னை திரும்பினார்.. குடும்பம் மகிழ்ச்சி!

By

சென்னை: கொரோனா லாக்டவுன் காரணமாக, கனடாவில் சிக்கிக்கொண்ட நடிகர் விஜய் மகன் சஞ்சய் சென்னைத் திரும்பியுள்ளார்.

Recommended Video

Thalapathy Vijay to direct Movie • Kadhai, ThiraiKadhai, Eyakkam

பிரபல நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துகள் முடக்கப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.

Save One Child's Life. Donate Now.

சிறப்பு விமானங்கள்

சிறப்பு விமானங்கள்

உடனடியாக அவர்களால் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. இந்தியா சார்பில் இதுபோன்று சிக்கியவர்களை மீட்க வந்தே பாரத் விமானங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் இந்த சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அந்தந்த விமான நிலையங்களின் அருகில் உள்ள ஓட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

நடிகர் விஜய் கவலை

நடிகர் விஜய் கவலை

இந்நிலையில், நடிகர் விஜய் மகன் சஞ்சய்யும் சென்னைத் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் இதனால் நடிகர் விஜய் கவலை அடைந்திருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகி இருந்தன. இதை நடிகர் விஜய் தரப்பில் மறுத்திருந்தனர். தனது மகன் நன்றாக இருக்கிறார் என்றும் மகனிடம் நடிகர் விஜய் தினமும் போனில் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மகனை சந்தித்த மகிழ்ச்சி

மகனை சந்தித்த மகிழ்ச்சி

இந்நிலையில், அவர் சமீபத்தில் சென்னை திரும்பியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பிய அவர், பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப் படுத்தப்பட்டார். பின்னர் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு தனது பெற்றோரை சந்தித்துள்ளார். பல மாதங்களுக்குப் பிறகு மகனைச் சந்தித்ததால் நடிகர் விஜய்யும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நான் அடிச்ச தாங்கமாட்ட

நான் அடிச்ச தாங்கமாட்ட

விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தில் நான் அடிச்ச தாங்கமாட்ட என்ற ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார், சஞ்சய். குறும்படம் ஒன்றிலும் நடித்திருந்தார். படிப்பை முடித்த பின் அவர் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் உருவாகி வரும் உப்பெனா படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X