Don't Miss!
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட நம்ம விஜய் மகன் இவருடனா...தாறுமாறாக வைரலாகும் ஃபோட்டோ
சென்னை : நடிகர் விஜய் தற்போது, டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் முழு மூச்சாக நடித்து வருகிறார். பூஜை ஹெக்டோ லீட் ரோலாக நடித்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
கமலின்
விக்ரம்
படத்தில்
டான்ஸ்
மாஸ்டர்
யார்
தெரியுமா?
இன்றைய
டாப்
5
பீட்ஸில்!
இதைத் தொடர்ந்து, தோழா படத்தை இயக்கிய தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கப்பட உள்ளது. இந்த படத்தை முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக்க உள்ளார்.

லண்டனில் படிக்கும் விஜய் மகன்
விஜய், தனது பல வருட தோழி சங்கீதாவை 1999 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சஞ்சய்க்கும் படம் இயக்குவதில் அதிக ஆர்வம் உள்ளதாம். இது தொடர்பாக அவர் லண்டனில் படித்து வருகிறார்.

வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்
சஞ்சய் தனது தந்தை விஜய்யுடன் இருக்கும் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை விஜய் ரசிகர்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, அதை வைரலாக்கி வருவார்கள். விஜய்யின் மகனை எங்கு பார்த்தாலும் விஜய் ரசிகர்கள் அந்த ஃபோட்டோ எடுத்து வைரலாக்கி விடுகிறார்கள்.

நிவின் பாலியுடன் விஜய் மகன்
இந்நிலையில் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள், மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலியுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ ஒன்று இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது. பிரேமம் படத்தின் மூலம் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பழக்கமான நிவின் பாலி, தற்போது டைரக்டர் ராம் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இரு ரசிகர்களும் கொண்டாட்டம்
நிவின் பாலியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் மகனும், நிவின் பாலியும் இணைந்து எடுத்துக் கொண்ட இந்த ஃபோட்டோவை விஜய் மற்றும் நிவின் பாலி ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து, வைரலாக்கி வருகிறார்கள்.

தமிழில் நிவின் பாலி
நீண்ட இடைவெளிக்கு பிறகு நிவின் பாலி தமிழில் நடிக்கும் படம் இது. இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் தனுஷ்கோடியில் துவங்கி, நடந்து வருகிறது. இந்த படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் சூரியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.