புதுப்புது அவதாரம் எடுக்கும் விஜய்யின் மகன்: வைரல் வீடியோ
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முதலாக திரையுலக பிரபலம் ஒருவரை பேட்டி கண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆக விரும்புகிறார். இந்நிலையில் அவர் இயக்கி நடித்த குறும்படமான ஜங்ஷன் வெளியாகியுள்ளது.

[வெளியானது விஜய் மகன் இயக்கிய குறும்படம்: சும்மா சொல்லக்கூடாது... ]
குறும்படம் வெளியான வேகத்தில் ஜேசன் சஞ்சய் புதிய அவதாரம் எடுத்துள்ளார். நோட்டா பட இயக்குனர் ஆனந்த் ஷங்கரை பேட்டி கண்டுள்ளார். அவர் திரையுலக பிரபலம் ஒருவரை பேட்டி எடுத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
அந்த பேட்டியின்போது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. அதை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையுடன் ஷேர் செய்து வருகிறார்கள்.
பார்க்க அப்படியே அப்பா மாதிரியே இருக்கிறார் சஞ்சய். எல்லாம் சரிங்க தம்பி. கொஞ்சம் தமிழில் பேட்டி எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குறும்படத்திலும் ஆங்கில வாடை அதிகம் அடித்தது. அதை மட்டும் கவனித்தால் நல்லது.


Click it and Unblock the Notifications











