கத்தியின் ‘செல்பி புள்ள’ பாடல் லீக்: முழு படத்தையும் வெளியிடுவோம் என மிரட்டல்
விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் செல்பி புள்ள பாடல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்,சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கத்தி திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனைதான். கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் படத்தை வெளியிட தடைகோரும் தமிழ் அமைப்புகளை சந்தித்து வரும் படக்குழுவினர் தற்போது புதிதாக இன்னொரு பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் விஜய், அனிருத் இசையமைப்பில் செல்பி புள்ள என்ற பாடலை பாடினார்.

செல்பி புள்ள பாடல்
விஜய் பாடுவதற்கு முன்னர் அனிருத் முழுப்பாடலையும் விஜய்க்கு பாடி காட்டினார். இரண்டு பேருமே பாடிய பாடல்களும் ஒலிப்பதிவு செயப்பட்டுள்ளது. ஆனால் விஜய் பாடிய பாடல்தான் படத்தின் வரும் என்று அனிருத் கூறியுள்ளார்.

கசிய விட்டது யார்?
இந்நிலையில் அனிருத் பாடிய செல்பி புள்ள பாடல் இன்று காலை இணையத்தில் வெளியாகியுள்ளது. அனிருத் இசைக்குழுவில் இருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் இந்த பாடலை லீக் செய்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

பாதுகாப்பு அதிகரிப்பு
இதனால் கத்தி படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதையொட்டி அனிருத் ரிகார்டிங் செய்யும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது அது இல்லை
இது குறித்து படக்குழு அளித்துள்ள தகவலில் ‘கத்தி படத்தில் இடம்பெறும் பாடல் இது இல்லை, ரசிகர்கள் ஏமாற வேண்டாம், விரைவில் நாங்களே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்' என்று தெரிவித்துள்ளனர்.

முழு படமும் வெளியாகும்
இந்நிலையில் கத்தி படத்தினை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டால், முழுப்படத்தையும் ரிலீஸுக்கு முன்னரே இண்டர்நெட்டில் வெளியிடுவோம் என விஜய்யின் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











