தலைவா 9 ஆண்டு கொண்டாட்டம்.. ஸ்பெஷல் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வெளியிட்ட ரசிகர்கள்!
சென்னை : நடிகர் விஜய், அமலா பால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2013ல் வெளியான படம் தலைவா.
இந்தப் படம் எந்த அளவிற்கு சர்ச்சைகளை சந்தித்ததோ அந்த அளவிற்கு ரசிகர்களின் உள்ளத்தில் சிறப்பான இடத்தையும் சந்தித்தது.
இந்நிலையில் தற்போது இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தலைவா படம்
நடிகர் விஜய், அமலா பால், சத்யராஜ், மனோபாலா, சந்தானம், பொன்வண்ணன், சுரேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2013 ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான படம் தலைவா. இந்தப் படத்தில் விஜய்யின் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு சந்தித்த பிரச்சினைகள் ஏராளம்.

சிக்கலில் சிக்கிய தலைவா படம்
இந்தப் படத்தின் தலைப்பு காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியானது. இதுபோன்ற பல பிரச்சினைகளில் சிக்கி இந்தப் படம் தடுமாறியபோது நடிகர் சிம்பு மட்டுமே இந்தப் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

சிவகார்த்திகேயனின் சபதம்
அவர் விஜய் ரசிகர்கள் அந்த நேரத்தில் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். இதேபோல சிவகார்த்திகேயனும், தலைவா படம் வெளியாகும்வரை மற்ற எந்தப் படத்தையும் தான் பார்க்கப் போவதில்லை என்று ட்வீட் செய்திருந்தார். ரிலீசில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஆனால் ரிலீசுக்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்
அந்தப் பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து கடந்த 2013 ஆகஸ்ட் 9ம் தேதி இந்தப் படம் வெளியானது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினார்கள். ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தற்போது 9 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் தொடர்ந்து இந்தப் படத்தை ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

ட்ரெண்டிங்கில் தலைவா படம்
அடுத்தடுத்து டிபிக்கள், போஸ்டர்கள், வாட்ஸ்அப் ஸ்டேடஸ் என்று இணையதளத்தில் விஜய் என்ற தீ பற்றி வருகிறது. இந்தப் படத்தின் காட்சிகள் உள்ளிட்டவற்றையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக ஏராளமான போஸ்டர்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தத் திரைகளில் தீப்பிடித்து வருகிறது.

சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டேடஸ்
குறிப்பாக படத்தின் பல காட்சிகளை இணைத்து வெளியாகியுள்ள வாட்ஸ்அப் ஸ்டேடஸ் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் விஜய்யின் முக்கியமான காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. தலைவன் என்பது நாம தேடி போற விஷயம் இல்லை, நம்மை தேடி வரும் விஷயம் என்னும் தலைவா படத்தின் முக்கியமான டயலாக்குடன் இந்த ஸ்டேடஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

மாஸான விஜய்
விஜய் என்றாலே மாஸ் தான் என்பதை மீண்டும் அவரது ரசிகர்கள் நிரூபித்துள்ளனர். வெளியான போதே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த தலைவா படம், தற்போது 9 ஆண்டுகளை கடந்த நிலையிலும் அவரது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருவது மிகவும் சிறப்பானது.


Click it and Unblock the Notifications











