தளபதி 67 படத்தில கமிட்டான நடிகை.. வெளியான சூப்பர் தகவல்!

சென்னை : நடிகர் விஜய்யின் நடிப்பில் வரும் பொங்கலையொட்டி ரிலீஸ் ஆக உள்ளது வாரிசு படம். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்திலிருந்து இரண்டு சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமன் இசையமைப்பில் வெளியாகியுள்ள இந்த பாடல்கள் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது.

விஜய்யின் நடிப்பில் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அவரது 66-வது படமாக வாரிசு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி படிப்பள்ளியின் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

படத்தில் பிரபு, சரத்குமார், குஷ்பு உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து வரும் பொங்கலையொட்டி படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் மூன்று போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் ஆன நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இரண்டாவது சிங்கிள்

இரண்டாவது சிங்கிள்

கடந்த நான்காம் தேதி விஜய்யின் 30 ஆண்டு திரைபயணத்தை முன்னிட்டு படத்தின் இரண்டாவது சிங்கிளும் வெளியானது. இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. தொடர்ந்து படத்தின் இசை வெளியீடும் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில் புத்தாண்டையொட்டியே படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

இதனிடையே விஜயின் தளபதி 67 படத்தின் வேலைகளும் துவங்கியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை போடப்பட்டு படத்தின் வேலைகள் துவங்கியுள்ளன. ஆயினும் படத்தின் சூட்டிங் ஜனவரி மாதத்தில் தான் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் கேங்ஸ்டர் ஆக நடிக்க உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தின் நடிகர்கள்

படத்தின் நடிகர்கள்

இந்த படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்டவர்களும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் விக்ரம் படத்தை போலவே படத்தின் அளென்ஸ்மெண்ட் வீடியோவையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் புது வரவு

படத்தின் புது வரவு

இதனிடையே படத்தின் புதிய வரவாக பிரபல நடிகை பிரியா ஆனந்தும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் லோகேஷ் யுனிவர்சில் இணைந்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தகவலை லோகேஷ் விரைவில் உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X