For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீட் பிரச்சனையை கையில் எடுக்கும் விஜய்.. ‘தளபதி 64’ டைட்டில் லீக்?

|
Thalapathy 64 | Rathnakumar trolls Lokesh kanagaraj | லோகேஷை கலாய்த்த ’ஆடை’ இயக்குநர் ரத்னகுமார்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' டைட்டில் இணையத்தில் கசிந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

கார்த்தியின் கைதி திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் 64 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இதன் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு டெல்லியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன ரோல்?

என்ன ரோல்?

தளபதி 64 படத்தில் நடிகர் விஜய் என்ன ரோலில் நடித்து வருகிறார் என்ற கேள்வி தான் இணையத்தில் வைரலாக கேட்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஆசிரியராக விஜய் நடிக்கிறார் என்றும் கல்வி சம்மந்தமான படமாக தளபதி 64 உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், சமீபத்தில் லீக்கான புகைப்படங்கள், விஜய் மாணவராக நடிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

கார்த்தியின் கைதி படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் வித்தியாசமாகவும், த்ரில் அனுபவத்தையும் கொடுத்து கடைசி காட்சி வரை ரசிகர்களை சீட்டில் கட்டி வைத்த நிலையில், விஜய், விஜய்சேதுபதி என இரு பெரும் நடிகர்கள் இணைந்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஏன் இத்தனை நடிகர்கள்?

ஏன் இத்தனை நடிகர்கள்?

இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் படத்தில் பல திறமையான நடிகர்கள் படத்தில் இணைந்துள்ளனர். விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், ஸ்ரீமன், ஸ்ரீநாத், ஆண்டனி வர்கீஸ், ரம்யா, செளந்தர்யா, சேத்தன், பிரேம் என நடிகர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கல்வி சம்மந்தமான படமாக ‘தளபதி 64' உருவாகி வருவதால், ஆசிரியர் ரோல்களிலும், மாணவர்கள் ரோல்களிலும் நடிக்க பல நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளார்களாம்.

லீக் பிரச்சனை

தளபதி 64 ஷூட்டிங் டெல்லியில் ஒரு கல்லூரியில் நடந்தாலும், விஜய்யின் மாஸ் இந்தியளவில் பரவி இருப்பதால், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் எல்லாம் கசிந்து வருகின்றன. இந்நிலையில், விஜய்யின் ‘தளபதி 64' லுக் புகைப்படங்களை லீக் செய்த ட்விட்டர் ஐடிக்களுக்கு எதிராக படக்குழுவினர் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். லீக்காகும் புகைப்படங்களை யாரும் பயன்படுத்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கமல் படமா?

கமல் படமா?

நடிகர் கமலின் நடிப்பில் வெளிவந்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் ரீமேக்கா அல்லது காப்பியா? என்ற ஒரு வதந்தியும் கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது. ஏனென்றால் படத்தில் மருத்துவ துறை மாணவராக கமல் நடித்துள்ளார் என்ற தகவல் கசிந்தது தான் இதற்கு காரணமாம்.

என்ன டைட்டில்?

கார்த்தி படத்திற்கு கைதி என்ற டைட்டில் வைத்த லோகேஷ் கனகராஜ், தளபதி 64 படத்திற்கு டாக்டர் என்ற டைட்டில் வைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. நீட் பிரச்சனையை தான் நடிகர் விஜய் இந்த படத்தில் கையிலெடுத்துள்ளார் என்றும் நிச்சயம் கல்வித்துறையில் நடக்கும் ஊழல்களை இந்த படம் தோலுரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Thalapathy Vijay's upcoming film directed by Lokesh Kanakaraj is tentatively titled 'Thalapathy 64'. Earlier, Vijay was snapped at the Chennai airport as he headed to Delhi for the film’s schedule.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more