ரொம்ப பண்றீங்க சார்.. தளபதி 64 படத்தால் பிகில் படத்திற்கு வந்த பிரச்சனை.. ஏன் லோகேஷ் இப்படி?

பிகில் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வரும் நிலையில் தற்போது தளபதி 64 படமே பிகில் படத்திற்கு பிரச்சனையாகி உள்ளது.

Recommended Video

Thalapathy 64 Pooja : படத்தின் சென்னையில் இன்று படத்தின் படப்பிடிப்பு பூஜை-வீடியோ

சென்னை: பிகில் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வரும் நிலையில் தற்போது தளபதி 64 படமே பிகில் படத்திற்கு பிரச்சனையாகி உள்ளது.

தளபதி 64தான் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் கதையுடன் விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது.

மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன படம்

என்ன படம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் மூன்றாவது படமாகும் இது. அவரின் இயக்கத்தில், காரத்தி, நரேன் நடிப்பில் கைதி படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. மாநகரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் இரண்டாவது படமாகும் இது. இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

எப்படி

எப்படி

படத்தின் டீசர் பலரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கைதி படம், விஜயின் பிகில் படத்துடன் போட்டி போடுகிறது. பிகில் படமும், கைதி படமும் தீபாவளி அன்று வெளியாகிறது. இதனால் லோகேஷ் கனகராஜ் படமும் அட்லீயின் பிகில் படமும் ஒன்றாக மோதுகிறது.

இன்னொரு

இன்னொரு

பிகில் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் இப்படி ஒரு வகையில் செக் வைத்து இருக்கிறார் என்றால் இன்னொரு வகையிலும் அவர் செக் வைத்துள்ளார். ஆம் இப்போது விஜய் ரசிகர்கள் பிகில் படத்தை விட தளபதி 64 படத்தைதான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

விஜய் சேதுபதி, விஜய், ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன், சாந்தனு என்று பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது. இதனால் பிகில் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு குறைந்து தளபதி 64க்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுதான் தற்போது பிகில் படக்குழுவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மோசம்

மோசம்

பிகில் படம் இன்னும் இரண்டு வாரத்தில் வருகிறது. ஆனால் மக்கள் யாரும் அதுகுறித்த பேசுவதில்லை. எல்லோரும் தளபதி 64 பற்றித்தான் பேசுகிறார்கள். இதனால் படத்தின் விளம்பரம் குறைந்து கொண்டே வருகிறது, என்று படக்குழு மோசமாக புலம்பி வருகிறதாம்.

என்ன கேள்வி

என்ன கேள்வி

சில ரசிகர்களே இதுகுறித்து கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். இன்னும் பிகில் படத்தின் டீசர் கூட வெளியாகவில்லை. ஆனால் தளபதி 64க்கு விளம்பரம் அதிகமாக இருக்கிறது. அதற்குத்தான் அதிகமாக அப்டேட் வருகிறது என்று கூறி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X