தளபதி 65 வெளிநாட்டு லோகேஷனை வெளியீடு...விவாதத்திற்கு பிள்ளையார்சுழி போட்ட டைரக்டர்

சென்னை : மாஸ்டர் படத்தின் அமோக வெற்றிக்கு பிறகு, விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தை அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்த்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறிதும் குறைய விடாதபடி தினம் ஒரு அப்டேட்டை வெளியிட்டு சுவாரஸ்யத்தை கூட்டி வருகிறது படக்குழு.

தளபதி 65 படத்தின் முக்கிய பகுதி ரஷ்யாவில் எடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சோவியத்தில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட தங்க சிலையின் போட்டோக்களை, தளபதி 65 படத்தின் டைரக்டர் நெல்சன் திலீப்குமாரே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Vijays Thalapathy 65 foreign location pics out

அதுவும் ஒன்றல்ல 4 போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனால் இந்த போட்டோவில் உள்ள இடம், இந்த சிலை படத்தில் குறிப்பிடதக்கதாக அமையுமா, நெல்சன் எதற்காக இந்த போட்டோக்களை வெளியிட்டார், என்ன சொல்ல வருகிறார் என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.

தளபதி 65 பற்றி ஏற்கனவே பல தகவல்கள் இது உண்மையா, அது உண்மையா என தெரியாமல் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் மற்றொரு விவாதத்திற்கு பிள்ளையார்சுழி போட்டுள்ளார் டைரக்டர் நெல்சன் திலீப்குமார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார் என்பது மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பது கூட இன்னும் உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X