விஜய் படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ்? கொண்டாட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகிவரும் படம் தளபதி 65.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. உடனடியாக தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் விஜய் முதல்கட்ட படப்பிடிப்பை ஜியார்ஜியாவில் முடித்துவிட்டு வந்துள்ளார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இங்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா மற்றும் அதையடுத்த லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் தற்போது படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

தற்காலிகமாக ரத்து
விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பங்கேற்கவிருந்த ஷாப்பிங் மால் காட்சிகளுக்காக செட்கள் போடும் பணியில் தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அதை உடனடியாக நிறுத்த நடிகர் விஜய் கேட்டுக் கொண்டதையடுத்து செட்கள் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் புதிய அப்டேட்
ஆயினும் விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடத்தப்படும் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது படம் குறித்த அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அனிருத் இசை
இந்த படமும் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மலையாள நடிகை அபர்ணா தாசும் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











